Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 26, 2011

வீராணம் ஏரியிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை யினால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.ஏரியை பாதுகாக்க வெள்ளியங் கால் ஓடையில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கரையோரத்தில் உள்ள 25 கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீராணம் ஏரி
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வட வாறு மூலமாகவும், மழைக் காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண் ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியாகும்.மழைக்காலத்தில் ஏரியை பாதுகாக்க 44 அடிக்கு மேல் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் பொதுப் பணித்துறை அதி காரிகள் மழைக்காலத்தில் 44 அடிக்கு மேல் உயர்த்தாமல் ஏரியை பாதுகாத்து வரு கின்றனர். நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 43.30 அடியாக இருந்தது.

தண்ணீர் திறப்பு
இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இந்த மழை யினால் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வருகிறது.வடவாற்றில் இருந்து 100 கன அடிநீரும் வருவதால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து 43.70 அடியை எட்டியது.

தொடர்ந்து நீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஏரியை பாதுகாக்கும் நோக்கில் லால்பேட்டை வெள்ளியங் கால் ஓடை வழி யாக 500 கன அடி திறந்து விடப் பட்டது.சேத்தியாத் தோப்பு வி.என்.எஸ்.மதகு வழி யாக 800 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது.

கிராமங்கள் பாதிக்கும் அபாயம்
சென்னைக்கு வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.இருப்பினும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் வெள்ளியங்கால் ஓடைக்கரையோர கிராம மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.கரையோர கிராமங்களான நந்திமங்கலம், கீழக்கரை, கீழவன்னியூர், திரு நாரையூர், வீரநத்தம், எள்ளேரி கிழக்கு, சர்வராஜன் பேட்டை, நெய்வாசல், தொருக்குழி, சோழக்கூர், தெம்மூர்,மெய் யாத்தூர் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக் கும் அபாயம் ஏற்படும்.

இதேபோல் வெண்ணங்குழி ஓடை நிரம்பி வழிவதால் ரோட்டில் தண்ணீர் செல்கிறது. இதனால் சிதம்பரம்- திருச்சி செல்லும் சாலை துண்டிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் அந்த பகுதியில்
விவசாயிகள் பயிரிட்டுள்ள 1000 ஏக்கர் சம்பா பயிர்களில் தண் ணீர் தேங்கி உள்ளது.கந்தமங்கலம், பழஞ்சநல்லூர், மடப்புரம், வீராணநல்லூர் உள்பட 15-க் கும் மேற்பட்ட கிராம வயல் களில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...