Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 23, 2011

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி:ரிசர்வ் வங்கியால் சரிவை தடுக்க முடியாது: பிரணாப்

மும்பை:அன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் கூட இந்த சரிவை தடுத்து நிறுத்த முடியாது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.நேற்றைய வர்த்தகத்தில், ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கட்டத்தில், 52.73 ரூபாயாக சரிவடைந்தது. வர்த்தகத்தின் இறுதியில், 52.30 ரூபாய் என்ற அளவில் நிலை பெற்றது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, எண்ணெய் நிறுவனங்கள் டாலரில் வழங்குகின்றன. இதற்காக, இந்நிறுவனங்கள் அதிகளவில் அமெரிக்க டாலரை வாங்கி வருகின்றன.மேலும், வங்கிகளும் அவற்றின் அன்னியச் செலாவணி பரிமாற்றத்திற்காக டாலரை வாங்குவதால், டாலருக்கானதேவை அதிகரித்துள்ளது. இதனால், டாலர் மதிப்பு அதிகரித்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.இந்திய ரூபாய் மட்டுமின்றி, டாலருக்கு எதிரான இதர நாடுகளின் செலாவணிகளின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
சென்ற திங்களன்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, கடந்த, 32 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டு, 51.15 ரூபாய் என்றளவிற்கு சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பாண்டில், சென்ற ஜூலை முதல், இது வரையிலுமாக ரூபாயின் வெளிமதிப்பு, 15 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. நிதி சந்தையில், டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாயின் வெளிமதிப்பு மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி காணும்போது, ரிசர்வ் வங்கி அதிகள வில் டாலர்களை புழக்கத்தில் விட்டு, சரிவைத் தடுப்பது வழக்கம்.


ஆனால், கடந்த சில வாரங்களாக ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து வந்த நிலையில், ரிசர்வ் வங்கி எந்த விதமான நடவடிக்கையும்மேற்கொள்ளவில்லை.இது குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி கூறும்போது," அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில்மேற்கொண்டிருந்த முதலீட்டை அதிக அளவில் திரும்பப் பெற்றுள்ளன. சர்வதேச நெருக்கடியால் பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. இத்தகைய காரணங்களால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. ரிசர்வ் வங்கி தலையிட்டால் கூட, இந்த சரிவை தடுத்து நிறுத்த முடியாது' என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...