Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 09, 2011

அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை-ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்:அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பின் அருகில் உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலின் பின்னணியில் நஜாதின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் நஜாத் கூறியிருப்பதாவது:இதர நாடுகளை வறுமையில் உழலச்செய்து அவர்களுடைய சொத்துக்களை கொள்ளையடித்து அமெரிக்கா தனது சொந்த செல்வ செழிப்பை உறுதிச்செய்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அங்கீகரிக்க இயலாது.
சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் தலைவர் யூகியோ அமானோ அமெரிக்காவின் கைப்பாவையாவார். மேற்கத்திய சக்திகளின் அணு ஆயுதங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்யாத சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அமெரிக்கா வசம் 5 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது.இவ்வாறு நஜாத் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தயார் செய்துள்ள அறிக்கை பொய்யான காரணங்களின் பின்னணியில் உள்ளதாகும்.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளிடன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வம் அல்லாத அறிக்கையின் வாதத்தில் உறுதியாக இருந்தால் அதனை விரைவாக வெளியிட வேண்டும் என ஸலாஹி கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...