Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 31, 2011

வந்து போகும் வருடங்கள்!!!

கால சக்கரத்தை சூழலச் செய்யும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்:

இரவையும் பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவில் சான்றை ஒளியிளக்க செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம். [அல்குர்ஆன் 17:12]

புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல சாதனைகளையும் செய்து புததாண்டை அடையப்போகும் மகிழ்ச்சியில் தடபுடல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இனி நடைபெறும். புது வருடத்தை அடைந்ததற்காக பூரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணமாக பல கருத்துள்ள (?) எஸ்எம்எஸ்கள் மெயில்கள் பரிமாறப்படும். தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாகவும அன்பு வெளிப்படும்.
இந்த விழாக்கோலம் நம் சகோதரர்களையும் விட்டபாடில்லை...

கடலூர்- புதுவை இடையே கரையைக் கடந்தது புயல்-140 கி.மீ வேகத்தில் கடும் சூறைக்காற்றுடன் கன மழை

சென்னை: மிகத் தீவிரமான புயலாக மாறிய தானே, புதுச்சேரி கடலூருக்கு இடையே இன்று காலை 6.30 முதல் 7.30 மணிக்கு இடையே கரையைக் கடந்தது. தற்போது இது பலவீனமடைந்த தீவிர காற்றழுத்த மண்டலமாக கடலூர், புதுச்சேரி இடையே நிலை கொண்டுள்ளது. மேலும் பலவீனமடைந்து மேற்கு நோக்கி இது நகரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

நேற்று மாலை புயல் புதுச்சேரியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. அது புதுச்சேரி-கடலூர் இடையில் உள்ள கடலோரத்தை நோக்கி நகரத் தொடங்கியது. இதன் காரணமாக நேற்று மாலையில் இருந்தே புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது.

சுமார் 140 கி.மீ. வேகத்தில் பேய்க் காற்று வீசியது. இதில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சரிந்தன. இதையடுத்து புதுச்சேரி, கடலூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

டிசம்பர் 25, 2011

அஜீரணம் பல் ஈறுகளுக்கு உகந்தது கொத்தமல்லி கீரை

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்.


கொத்து மல்லி கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறி வரும்.


முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்துமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் பளபளப்பாகும்.


கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும்.


கொத்துமல்லி இலைகளை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பருத்து உடையும்.


கொத்துமல்லி சாற்றை தேனோடு கலந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் ஏற்பட்ட பித்த நோய் முற்றிலும் குணமாகும்.


கொத்து மல்லி கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சர்க்கரை போட்டு அருந்தி வந்தால், உடல் உஷ்ணம் நீங்கும். அஜீரணம் உண்டாகாது.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

- தினமலர் 22-12-2011 செய்தி

இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி:உத்தரபிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புது டெல்லியில் தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 4-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக
நடைபெறுகிறது. பஞ்சாப் மற்றும் உத்தரகண்டில் ஜனவரி 30-ம் தேதியும், மணிப்பூரில் ஜனவரி 28-ம் தேதியும், கோவா சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெற உள்ளது.

ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் மார்ச் 4-ம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்கும். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இது மத்திய அரசுக்கும் பொருந்தும்.

தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை அறிமுகப்படுத்த திட்டம் - தற்போதைய ரேஷன் கார்டு ஒராண்டுக்கு நீடிப்பு

சென்னை: தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை பயன்பாட்டில் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் காலகேடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய ரேஷன் கார்டுகள் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளின் காலகெடுவை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டிசம்பர் 21, 2011

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி?

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

இருமுறை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு PCC விஷயமாக சென்றதில் நான் அறிந்தவற்றை இணையத்தில் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் தான் இந்த பதிவு.

Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf
3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை (உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)

விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் https://passport.gov.in/pms/PPForm.படப்

டிசம்பர் 18, 2011

போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம்

கடலூர்:போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி அறிவித்து உள்ளார்.

புதன்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக தகவல் அளிப்போருக்கு (கைப்பற்றுதலில் முடிந்தால்) ரூ.1,000 சன்மானம் வழங்கப்படும். போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம் வழங்கப்படும். தகவல்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

தகவல் தெரிவிக்கும் அதிகாரிகளின் செல்போன் எண்கள்:

மாவட்ட விநியோக அலுவலர் 9445000209.
வட்ட வழங்கல் அலுவலர்கள்:
கடலூர் 9005000210.
சிதம்பரம்: 9445000211.
காட்டுமன்னார்கோயில் 9445000212.
திட்டக்குடி 9445000214.
விருத்தாசலம் 9445000213.
பண்ருட்டி 9445000215.
குறிஞ்சிப்பாடி 9445796405.

இணையதள பாஸ்வோர்ட் எச்சரிக்கை

இப்பொழுது எல்லாம் நம்முடைய பாஸ்வோர்டை திருடி நமக்கே தெரியாமல் இமெயிலை பயன்படுத்தும் நிகழ்ச்சி சர்வ சாதரணமாக நடைபெறுகின்றது.எனவே உங்களுடைய பாஸ்வோர்டை பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்துகொள்வது இன்றியமையாதது.தொடர்ந்து படியுங்ககள்.

உங்கள் பாஸ்வேர்ட் களவு போக எவ்வளவு நேரமாகும்? – 10 நிமிடம் போதும்
ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரிய தாகிவிடும்.http://www.kalvikalanjiam.com

நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான்.

உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக

டிசம்பர் 17, 2011

ஹிந்துத்துவா பயங்கரவாத விசாரணையை முடக்க சங்க்பரிவாரின் சதி

    மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுவரும் பா.ஜ.கவின் பின்னணியில் சங்க்பரிவார் செயல்படுவதாக கருதப்படுகிறது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் ஆன பிறகே முழுமையாக வெளியானது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வதன் மூலம் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் மீதான விசாரணையை முடக்க திட்டமிட்டுள்ளன பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவாரங்கள்.

ப.சிதம்பரத்தின் மீது முன்பு ஒருபோதும் இல்லாத கோபத்தையும், காழ்ப்புணர்வையும் கடந்த சில நாட்களாக பா.ஜ.க வெளிப்படுத்தி வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தி பா.ஜ.க இரு அவைகளிலும் ப.சிதம்பரத்தை புறக்கணித்து வருகின்றது.

உள்துறை அமைச்சகம் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதில் அளித்துவருகிறார். டெல்லியில் ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆரை ரத்துச்செய்ய ப.சிதம்பரம் உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டை அண்மையில் எழுப்பியுள்ளது பா.ஜ.க. சிதம்பரம் ராஜினாமாச் செய்யக்கோரி பா.ஜ.க இரு நாட்களாக இரு அவைகளின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறது.

ப.சிதம்பரத்தின் சொந்த மாநிலமான தமிழகத்தில் அவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாசிச சிந்தனை கொண்ட அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமியை சங்க்பரிவாரங்கள் பயன்படுத்துகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசாவுடன் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியவர் சுப்ரமணிய சுவாமி ஆவார்.

பா.ஜ.கவுடனும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியுடன் நட்புறவு வைத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சிதம்பரத்தை குறிவைத்துள்ளார்.

செட்டியார் சமுதாயத்தைச் சார்ந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜெயலலிதாவும், சுப்ரமணிய சுவாமியும் நடத்தி வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் தமிழகத்தின் பார்ப்பண லாபியின் விருப்பங்கள் அடங்கியுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆசானாக செயல்பட்டு

உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் நிலையம் உள்ள திரீ ஜார்ஜெஸ் அணை நிரம்பியது

சீனாவில் உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் நிலையம் உள்ள திரீ ஜார்ஜெஸ் அணை நிரம்பியது. நீர்மட்டத்தை குறைப்பதற்காக மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பம காட்சி.
நன்றி:விடுதலை 

சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி

      வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வகையில் சென்னை சாலிகிராமம் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்ப எண்ணை பெற்று அசல் சான்றிதழ்களுடன் சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம். இந்த புதிய சேவை இங்கு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இதேபோல், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிப்பதற்காக சிறப்பு வசதி ஏற்கனவே தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏற்படுத்தப்பளட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை துணை, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கவும், தாம்பரம் துரைசாமி ரெட்டி சாலையில்

டிசம்பர் 16, 2011

முல்லைப் பெரியாறு உரிமையை எச்சூழலிலும் விட்டுத்தரமாட்டோம்’-தமிழகம்

   முல்லைப் பெரியாறு அணைப் விவகாரத்தில் தமிழகம் தனக்குள்ள உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்று சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. முதலில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் கருப்பசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்கு பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இதன்பின்பு, பேரவை கூடியதும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.

தீர்மானத்தின் விவரம்:

தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளின் வாதங்களையும், வல்லுநர்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதால், அதன் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும், எஞ்சிய பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி
27-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த உத்தரவை நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில், “கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 2006″ என்ற சட்டத்தை இயற்றி அந்தச் சட்டத்துக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று உண்மைக்கு மாறான பிரசாரம் மூலம் கேரள மக்களிடையே அந்த மாநில அரசு பீதியை கிளப்பி விடுகிறது.

புதிய அணை கட்டப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை கேரள அரசு வலியுறுத்தும் அதே நேரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என கடந்த 9-ம் தேதி கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்றாலும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட கேரள சட்டப் பேரவையை கண்டிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. எனவே, அந்தத் தீர்மானத்தின் மீது

பர்தாவில் என் அனுபவங்கள் - இவோன் ரிட்லி

    தாலிபான்கள் கையில் அகப்படும் வரையில் பர்தா அணிந்த பெண்களை வியப்புடன்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் 'ஐயோ பாவம்' என்று பரிதாபப்படுவேன். அடக்குமுறைக்கு ஆளான வாயில்லாப் பிராணிகளாக இருக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வேன்.

ஆப்பானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட உடனே அதாவது 2001 செப்டம்பர் 11 நிகழ்வு நடந்து 15 நாட்களுக்குப் பிறகு நான் ஆப்கன் சென்றேன். இராணுவ ஆட்சிக்குக் கீழ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நேரில் கண்டறிந்து ஒரு பத்திரிக்கைக்குக் கட்டுரை எழுதுவதுதான் என் பயணத்தின் நோக்கம்.

நீல நிறப் பர்தாவில் முகம் உட்பட முழு உடலையும் மூடிக் கொண்டிருந்தேன். ஆயினும் நான் கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறை வைக்கப்பட்டேன். நான் அவர்களை சபித்தேன். முகத்தில் துப்பினேன். அவர்கள் என்னைத் திட்டினார்கள். ஆனாலும் என் வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாம் குறித்து ஆராய்ச்சி செய்வதாகவும் நான் அளித்த வாக்குறுதியை நம்பி என்னை விடுதலை செய்தனர்.(இந்த விடுதலையில் அதிகம் மகிழ்ந்தது நானா அவர்களா என்று தெரியவில்லை.)

நான் லண்டன் திரும்பினேன். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப இஸ்லாத்தைக் குறித்து படிக்கத் துவங்கினேன். வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன். ஏனென்றால் குர்ஆனில் நான் எதிர்பார்த்த வசனங்கள் வேறு. அங்கு இருந்த வசனங்கள் வேறு. பெண்களை அடிமைப் படுத்தச் சொல்லும் வசனங்களும் ஆடுமாடுகளைப்போல அடிக்கச் சொல்லும் வசனங்களும்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் பெண்களின் உரிமைக்கும் விடுதலைக்கும் ஓங்கிக் குரல் கொடுக்கும் உன்னத வசனங்களை அதில் நான் கண்டேன். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டேன். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். என் உறவினர்கள், நண்பர்கள்,

டிசம்பர் 15, 2011

கேரளாவை விட்டு வெளியேற தமிழர்களுக்கு கெடுவாம்!

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசை கண்டித்து தேனி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காய்கறி, பால், அரிசி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், நகைக்கடைகள் சேதப்படுத்தப்பட்டன.

இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் கேரளாவில் வசிக்கும் தமிழர்களை தாக்கி வருகிறார்கள். சேத்துகுழி, சாஸ்தான் ஓடை, மங்கலம் போன்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை தாக்கி வருகிறார்கள். உடும்பன்சோலையில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

24 மணி நேரத்திற்குள் தமிழர்கள் கேரளாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து

பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடக்கம்:தேர்வுத்துறை அறிவிப்பு


பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:-

மார்ச்-8-மொழித்தாள் ஒன்று.

மார்ச்-9-மொழித்தாள் இரண்டு.

மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள்.

மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.

மார்ச்-16- இயற்பியல்,பொருளியல்,உளவியல்.

மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன்.

மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.

மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.

மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.

மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,

டிசம்பர் 13, 2011

டிசம்பர் 11, 2011

கடலூர் மாவட்டத்தில் 184 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலி

கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,க்கள்) பணியிடங்கள் பல காலியாக உள்ளதால் சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நிர்வாக வசதிக்காக கடலூர் மாவட்டம் மூன்று வாருவாய் கோட்டம், ஏழு தாலுகா, 32 குறுவட்டம் மற்றும் 901 வருவாய் கிராமங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் வருவாய் கிராமங்களை நிர்வகிக்க 604 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிராமங்களில் நிலவரி வசூலித்தல், கணக்குகள் பராமரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு சிட்ட அடங்கல், ஜாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தனர். ஆனால் தற்போது அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் வி.ஏ.ஓ.,க்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், இலவச கால்நடைகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் பயனாளிகள் தேர்வு செய்வது, ஜமாபந்தி, மனுநீதி நாள் முகாம், கிராம சபைக் கூட்டம், அரசின் நிவாரண உதவிகள் வழங்குவது, இயற்கை இடர்பாடுகளை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை கொடுப்பது உள்ளிட்ட அரசு மேற்கொள்ளும் இதர பணிகளையும்

ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி

ஸ்டாக்ஹோம்:டோன்னா எல்ஜம்மால் என்கிற 26 வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அவரை பொறுத்தவரையில் ஸ்வீடன் ஒரு பன்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு எனவும் அனைத்து துறைகளிலும் பல்வேறுபட்ட மக்கள் பணிபுரிந்தால்தான் அறிவும் புரிதலும் வளரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டோன்னா எல்ஜம்மால் சிறுவயது முதலே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் அவரின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து ஸ்வீடனில் போய் குடியேறியவர்கள். அவர் சிறைத்துறையில் பணிபுரியும்போதே ஹிஜாப் அணியும் பழக்கம் உடையவர் ஆவார். மேலும் முன்னதாக ஹிஜாப் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர் என்றும் பின்னர் தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக

டிசம்பர் 10, 2011

F.I.R பதிவு செய்வது எப்படி?

First Information Report - என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் 'முதல் தகவல் அறிக்கை'. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

"இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட் டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.

சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக் கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும்.

அவருக்கும் மேல் உள்ள அதிகாரி களான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட

கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்பு பாடத்திட்ட கையேடு

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக ஜோசப் அந்தோனிராஜ் அண்மையில் பதவி ஏற்றார். தொடர்ந்து கடலூர் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் புதன்கிழமை நடந்தது.

கூட்டத்துக்குப்பின் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் கூறியது:
கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.

குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்ற உளவியல் ரீதியான பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்

டிசம்பர் 08, 2011

மதக் கலவரத்தை தூண்டிய சுப்பிரமணிய சாமிக்கு ஹாவர்ட் பல்கலைக்கழகம் 'கல்தா'!

வாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.

கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர்.

இந் நிலையில், பிற மதங்களை புண்படுத்தும் வகையில் எழுதியதற்காக, ஹாவர்ட் பல்கலைக்கழகம், சாமி நடத்தி வரும் பாடங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கோடை விடுமுறை கால பள்ளியில், சம்மர் ஸ்கூலில் ‘Quantitative Methods in Economics and Business’ மற்றும் ‘Economic Development in India and East Asia’ ஆகிய தலைப்புகளில் பாடம் எடுப்பார் சாமி.

இந் நிலையில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்விப் பிரிவுக்கான

டிசம்பர் 07, 2011

ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு அமெரிக்கா உட்பட நூறு நாடுகள் பங்கேற்பு.

ஜேர்மனியின் பான் நகரில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு நேற்று(5.12.2011) நடந்தது. அமெரிக்கா, ஜேர்மனி உட்பட நூறு நாடுகளின் ஆயிரம் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகளவில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஆப்கான் எதிர்காலம் குறித்த மாநாடு நேற்று பான் நகரில் துவங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜேர்மனி வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே, சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான ஆப்கானை உருவாக்குவது தான் இம்மாநாட்டின் நோக்கம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆப்கான் ஜனாதிபதி கர்சாய், 2014ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய பின் ஆப்கான் எல்லா துறைகளிலும் மேம்படுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. நாட்டின் பாதுகாப்பைக் கையளிப்பதற்கான உறுதியாக இம்மாநாட்டை ஆப்கான் மக்கள் பார்க்கின்றனர் என்றார்.சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எப்) மற்றும் அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை விரைவில் ஆப்கானுக்கு அளிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மாநாட்டில் அறிவித்தார். மேலும் அவர்

பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும்: பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா

புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பலால் இடிக்கப்பட்டு 19-வது ஆண்டும் நினைவு தினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து உரைநிகழ்த்தினார் அவர்.

நீதியை நடைமுறைப்படுத்துவதற்கான தேசத்தின் வாக்குறுதியை
நிறைவேற்ற வேண்டுமானால் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும். பாப்ரி மஸ்ஜித் நிலத்தை மூன்று பங்காக பிரித்து அளிக்கும் சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்கள் மீது லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின்படி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தனது உரையில் வலியுறுத்தினார்.

மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்கு சட்டமியற்ற கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோருக்கு மனு அளித்தது. சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

டிசம்பர் 06, 2011

டிசம்பர் ஆறு.. ..அது என்று தான் ஆறும்?.. ..

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது.

டிசம்பர் 6 1992 ஒவ்வொரு முஸ்லிமினுடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாததொரு நாள். ஆம்! இந்துத்துவாக்கள் இந்திய முஸ்லிம்களின் இதயத்தைக் கசக்கிப் போட்ட நாள்.

இறையில்லம் ஒன்று மண்ணிலே வீழ்த்தப்பட்ட நாள். அந்த நாளின் நினைவுகள் இன்றும் நிழலாய் ஒவ்வொரு நெஞ்சத்திலும் நஞ்சாக நெருடிக் கொண்டிருக்க அந்தப் புனித இல்லம் தரைமட்டமாக்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன என்னும் போதும்

அந்தப் பள்ளியை இடித்த கயவர்களும் இடிப்பிற்குத் துணை போனவர்களும் இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதையும் நினைத்துப் பார்க்கும் பொழுது நடுநிலையாளர்களும் இதயமுள்ளவர்களும் இந்த தேசத்தில் இருக்கின்றார்களா? இல்லை பள்ளியின் இடிபாடுகளுக்கிடையே அவர்களும் சிதிலமாகிப் போனார்களா? என்று கேட்கத் தோன்றுகின்றது.

டிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள்

டிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்க பட்டது முழு உலக முஸ்லிம்களும் அதிர்ந்து போன நாள் அன்று முஸ்லிம் தலைவர்களாக தம்மை அடையாள படுத்திக் கொண்டவர்கள் அவமானத்தையும் கையாலாகாத தனத்தையும் ஏற்றுக்கொண்ட நாள் ஹிந்து பாஸிஸச் சக்திகளால் இந்திய முஸ்லிம்கள் வகை தொகையின்றி கொலை செய்யப்பட்ட நாள்

பள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்hலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.

கி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு

இப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட். இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.

ஆட்சியாளர் ஜஹாங்கீர் அவர்கள் காலம் முதற்கொண்டு தான் இந்தப் மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் என்றழைக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல் முஸ்லிம்கள் தொழுகைகளைக் கூட்டாக

டிசம்பர் 05, 2011

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக்
இந்தப்படத்தின் நோக்கம்
நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை.
முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

படம் தரும் படிப்பினை
பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான் கதையின் கதாபாத்திரங்கள்.
அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது.ஆங்காங்கே குரான் வசனங்கள் சுட்டி காட்டபடுவது மிக அருமை.
இந்த படத்தை பார்த்து தவறான வழியை தேர்ந்தெடுக்கும்

டிசம்பர் 04, 2011

தனிநபர் தங்கம் வாங்குவதில் உலகிலேயே இந்தியா முதலிடம்

   இந்தியர்களின் தங்க மோகம் உலகறிந்ததுதான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுவாரசியமான சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது MAQUARIE என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம். 04-12-2011 அன்று வெளியிட்டது

தனிநபர் தங்கம் வாங்குவதில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களிடம் உள்ள தங்கத்தின் அளவு 18 ஆயிரம் டன். இதன் மதிப்பு 48 லட்சம் கோடி ரூபாய். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சரி பாதியாகும்.உலகி்ன் மொத்த தங்க கையிருப்பில் 11 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது.

 கடந்த ஒன்றரை ஆண்டில் தங்கத்தின் விலை 64 சதவிகிதம் அதிகரித்தாலும் அதன் விற்பனை சிறிதும் குறையவில்லை என்று கூறுகிறது இந்த ஆய்வு. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பும் அதிகரித்து வருவதாக MAQUARIE என்ற சர்வதேச நிறுவன

தமிழ் நாடு மருத்துவ கவுன்சில் தலைவராக டாக்டர் அஸ்ரப் தேர்வு


பால்,பேருந்து கட்டண உயர்வுகளை கண்டித்து IUML ஆர்ப்பாட்டம்

பால்,பேருந்து கட்டண உயர்வுகளை கண்டித்து சிதம்பரம் ஆர்.டி.ஒ.அலுவலகம் முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 13 .12 .2011 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ.அமனுல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர்ரஹ்மான் , மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.தாஜுத்தின், தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர் , மாவட்ட துணைத் தலைவர் முஹமத் ஜெக்கரிய, ,லால்பேட்டை நகர தலைவர் கே.ஏ.முஹமத் ,செயலாளர் எம்.ஒ.அப்துல் அலி,துணைத்தலைவர்கள் தாஹா முஹமத்,தையுப் முஹிப்பி ,சிதம்பரம் நகர இளைஞர் அணி செயலாளர் முஸ்தபா ,பாபு, லால்பேட்டை பேரூராட்சி முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் ஜெ.சேக்தாவூத் , மிஸ்பாஹு,தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்வார் , எம்.ஹெச்.முஹமத் ஆசிப் ,மசூத் அஹமத் , ஏ.எஸ்.அஹமத், சாதுல்லாஹ் ,இனாமுல் ஹக் ,எம்.எஸ்.எப்.முஹமத் இஸ்மாயில் ,முத்தவல்லி எம்.ஹெச்.அப்துஸ்சலாம் ,மௌலவி எஸ்.எம்.ஜமால், கணக்கரப்பட்டு ஊராட்சி உறுப்பினர் அப்துல்ஹாதி மற்றும் பலர் பங்கேற்றனர்

சிதம்பரம் நகர செயலாளர் முஹமத் பைசல்

சி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி.

சென்னை: 
சி.ஏ., படித்துக் கொண்டே, தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம், பட்டப்படிப்பு படிக்கும் வகையில், புதிய திட்டத்தை சென்னை பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில், சென்னை பல்கலை பதிவாளர் லியோ அலெக்சாண்டரும், இந்திய சார்டட் அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனத் தலைவர் ராமசாமியும் கையெழுத்திட்டனர். இந்திய சார்டட் அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனத்தின் கீழ், சி.ஏ., படிக்கும் மாணவர்கள், அங்கு படித்துக்கொண்டே, சென்னை தொலைதூரத் திட்டத்தில் சேர்ந்து, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப, பி.காம்., பி.பி.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளை படிக்க, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

நேர்முகத் தேர்வும் - வெற்றி பெறுதலும்!

ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வு என்பது, ஒரு குறிப்பிட்ட பணிக்கான, ஒரு குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யும் நடைமுறையில், அந்நபரைப் பற்றிய விவரங்களை அறியும் செயல்பாடாகும்.

பணிக்கான நேர்முகத்தேர்வு என்பது தொழில்முறை மதிப்பீடு சார்ந்த ஒரு அமைப்பு ரீதியான செயல்பாடாகும். ஒரு நபரை இன்டர்வியூ எடுப்பதானது, பேசுதல் மற்றும் குழு கலந்துரையாடல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும், கேள்வி - பதில் என்ற வாய்மொழி பகுதியின் மூலமாக, ஒரு பணிக்கு தேவையான பொருத்தமான நபரை அடையாளம் காண முடிகிறது என்று பணி அமர்த்தும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த கேள்வி - பதில் பகுதியானது, நேரடியானதாகவோ, தொலைபேசி மூலமானதாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலமானதாகவோ இருக்கலாம்.

இன்றைய நவீன உலகில், பணிக்கான இன்டர்வியூ என்பது, சிறிது காலத்திற்கு முன்பு இருந்ததைவிட சவாலானதாக மாறிவிட்டது. பணிக்கு தேவையான சரியான நபரை பெறும் செயல்பாடு சிக்கலானது என்பதால், ஆட்களை தேர்வு செய்யும் மனிதவள நிபுணர்கள், ஒரு நபரின் தனிப்பட்ட மதிப்பீடுகள், தகுதிகள், திறன்கள், குண நலன்கள் மற்றும் பணிக்கான பொருத்தங்கள் ஆகியவற்றை பற்றி நுட்பமான மதிப்பீடுகளை மேற்கொள்கின்றனர். சிறிதுநேரம் ஒரு நபரிடம் பேசிவிடுவதால் மட்டுமே அவர் ஒரு குறிப்பிட்ட பணிக்கு பொருத்தமானவரா? என்பதை கணித்துவிட முடியாது. எனவே, பல நிறுவனங்கள் இன்டவியூ செயல்பாட்டில் பலவித அம்சங்களை கடைபிடிக்கின்றன. இறுதி நேர்முகத் தேர்வுக்கு முன்னதாக சில ஆரம்பநிலை இன்டர்வியூ செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

டிசம்பர் 01, 2011

இன்று 01.12.2011..உலக எய்ட்ஸ் தினம்




நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32)

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன் 24:30



எய்ட்ஸ் நோய் ஒரு விளக்கம் :
எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள் :

Acquired - A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது

Immune - I உடலின் எதிர்ப்பு சக்தி

Deficiency - D குறைத்துவிடுதல்

Syndrome - S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு

இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

எய்ட்ஸின் துவக்கம்
1983-ல் மருத்துவ வல்லுனர்களான லுக் மான்டாக்னெர் மற்றும் நேஷனல் கேன்சர் இன்ஸ்ட்டியூட்டை சேர்ந்த ராபர்ட் கேலோ குழுவும் மனிதர்களுக்குத் தாக்கும் புதுவகையான வைரஸ்ஸைக் கண்டறிந்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக இந்த வைரஸ் ஆனது முறையற்ற பாலியல் தொடர்புகளின் போது உருவாகி இரத்தத்தில் கலந்து விடுவதை கண்டறிந்தனர்.

எய்ட்ஸ் நோய் வருவது எப்படி ?
எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை