இராக் தேர்தல்: அல்லாவி கூட்டணி முன்னிலை!
இராக்கிய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இராக் முன்னாள் பிரதமர் இயாத் அல்லாவி தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற இராக் நாடாளு மன்றத் தேர்தலின் வாக்குகள் வெள்ளிக் கிழமை (26-03-2010) அன்று எண்ணப்பட்டன. இதில் தற்போதைய பிரதமர் நூரி மாலிகியின் கட்சியை விட அல்லாவியின் கூட்டணி இரண்டு சீட்கள் அதிகம் பெற்றுள்ளது.
இராக்கிய நாடாளுமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாகவும், அதன் முடிவை இராக்கியர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இராக்கிற்கான ஐநா சபை தூதர் முன்னர் கூறியிருந்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் தேர்தல் முடிவு குறித்து கூறிய பிரதமர் மாலிகி, இது இறுதி முடிவு அல்ல என்று கூறினார். தேர்தல் ஆணையம் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அல்லாவியின் கூட்டணி 91 இடங்களையும், மாலிகியின் கட்சி 89 இடங்களையும் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...