Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 28, 2010

காலாவதியான மருந்து விற்பனை எதிரொலி : சிதம்பரம் மருந்துகடை உரிமையாளர்கள் உஷார்

காலாவதியான மருந்து விற்பனை எதிரொலி : சிதம்பரம் மருந்துகடை உரிமையாளர்கள் உஷார்


சிதம்பரம்:” காலாவதியான மருந்து விற்பனை பிரச்னை விஸ் வரூபம் எடுத்துள்ள நிலையில் சிதம்பரம் பகுதி மருந்து கடை உரிமையா ளர்கள் உஷார் அடைந் துள்ளனர். காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத் துள்ள நிலையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மருந்து கடைகள், குடோன்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் காலாவதியான மருந்துகளை அழித்து வருகின்றனர். சிதம்பரம் பகுதியை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மருந்து கடை உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது கடையில் உள்ள காலாவதியான மருந்துகளை உடனடியாக அழித்து விட வேண்டும். மருந்துகள் கொள்முதல் செய்யும்போது மருந்து காலக்கெடு தேதி, பேட்ஜ் எண் மற்றும் லாட் எண் போன்றவைகளை பார்த்து வாங்க வேண்டும். மருந்து கடைகளில் பதிவேடு கட்டாயமாக பராமரிக்க வேண்டும். டாக்டர்கள் கொடுக்கும் மருந்து சீட்டுகளை பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுமானவரை டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்துகள் விற்க கூடாது. குறிப்பாக தூக்க மாத்திரை, மயக்க மாத்திரைகளை டாக்டர் பரிந்துரை இன்றி தரக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படியே மருந்து கடைகளில் விற்பனையாகாமல் தேங்கியிருந்த காலாவதியான மருந்துகளை கண்டுபிடித்து எடுத்து அழித்து வருகின்றனர்.

thanks: dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...