காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இறுதியில் தண்ணீர் திறக்கப்படும். வீராணம் ஏரி மூலம் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த ஆண்டு தேக்கப்பட்ட தண்ணீர் மே மாதம் வரை ஏரியில் நிரம்பி இருந்தது. இதனால் சென்னைக்கு தட்டுபாடின்றி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் கடுமையாக வெயில், மழையில்லாத காரணத்தால் ஏரியில் தேக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. தற்போது ஏரியில் 40.10 அடி தண்ணீர் உள்ளது.
சென்னைக்கு வினாடிக்கு 38 கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது. ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடைக்காலத்தில் வளர்ப்பதற்காக 1 லட்சம் மீன் குஞ்சுகள் மீன் வளத்துறை சார்பில் விடப்பட்டது. தற்போது ஏரி வறண்டதால் அவையும் ஆயிரக்கணக்கில் அழிந்தன. ஏரியில் தண்ணீர் வற்ற தொடங்கியதால் இறந்த மீன்கள் மற்றும் பாசிகளின் துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏரிக்கரை ஓரத்தில் வசிக்கும் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஏரி வறண்டதால் விவசாயம், பொதுமக்கள் என அனைத்து தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால்
சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி ஒரு வாரம் மட்டுமே நடைபெறும் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...