Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 18, 2012

இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு!


காபூல்:ஆப்கானிஸ்தானில் கூடுதல் தலையீடு தேவை என்ற அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணியாத இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு தெரிவித்துள்ளது. தாலிபானின் ஆங்கில இணையதளத்தில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இயங்கும் இந்தியாவுக்கு எதிரான போராளிகள் கூடுதல் பலம் பெறுவார்கள் என்ற இந்தியாவின் கவலையை தாலிபான் நிராகரித்துவிட்டது. இதர நாடுகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மண்ணில் இயங்க யாரையும் அனுமதிக்கமாட்டோம் என்று தாலிபான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு நேட்டோ படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் சூழலில் இந்தியா ஆப்கானிஸ்தானில் கூடுதலாக தலையிடவேண்டும் என்று இம்மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவர் இக்கோரிக்கையில் தோல்வியை தழுவியதாக தாலிபான் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் சுமையை இந்தியாவின் முதுகில் ஏற்றலாம் என கருதி 3 தினங்கள் இந்தியாவில் பனேட்டா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதிலும் இந்தியா அவரது கோரிக்கைக்கு செவி கொடுக்கவில்லை என தாலிபான் கூறுகிறது.
பாகிஸ்தானுடன் நீண்டகால உறவு தாலிபானுக்கு
உண்டு. ஆனால், பாகிஸ்தானின் முக்கிய எதிரியான இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்தது மூலம் தாலிபான் தனது நிலையை மாற்றி நடுநிலைப் போக்கை கையாளுவதாக கருதப்படுகிறது.
அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை துவக்கியது, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக கத்தரில் அலுவலகம் திறந்தது போன்றவை தாலிபானின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக மதிப்பீடுச் செய்யப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...