காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. சேர்மன் மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தாய் திட்டத்தின் பணிகளை பொது நிதியிலிருந்து செய்ய கோரி தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதற்கு திமுக உறுப்பினர்கள் பாலமணிகண்டன், பவுல்ராஜ், சித்ரா, அன்புக்கரசி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதுபோல பாமக கவுன்சிலர்கள் மற்றும் துணை சேர்மன் ஆறுமுகம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து திமுக கவுன்சிலர் பாலமணிகண்டன் கூறியதாவது: 19 பணிகளுக்கு 29 லட்சத்து 33 ஆயிரம் நிதியை பொது நிதியிலிருந்த எடுத்து பணி செய்ய வேண்டும் என கூட்டத்தில் கேட்டு கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம் என்றார். சேர்மன் மணிகண்டன், தீர்மானம் நிறைவேற்ற பட்டதாக தெரிவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தாய் திட்டத்தில் அரசு ஒவ்வொரு கிராமத்திற்கும் சுமார் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி பல்வேறு பணிகளுக்கு போதுமானதாக இல்லை.
அரசு சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பணி செய்ய அறிவுறுத்தியது. இதன்படி இக்கூட்டம்
நடைபெற்றது. இதில் தீர்மானம் முன் மொழியப் பட்டு நிறைவேற்றப் பட்டதாக தெரிவித்தார்.
source:dinakaran

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...