Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 20, 2012

ஹஜ் கார்ப்பரேஷன் – மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி:புனித ஹஜ் தொடர்பான காரியங்களை கையாள புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று சிறுபான்மை நலன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ஹஜ் ஏற்பாடுகள் குறித்து ஆராய நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சல்மான் குர்ஷித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இதனை தெரிவித்தார்.

 மேலும் அவர் கூறியது:ஹஜ் தொடர்பான அனைத்து காரியங்களையும் கையாள சுதந்திரமான ஹஜ் கார்ப்பரேசனை உருவாக்கவேண்டும் என்ற கருத்து முன்னில் உள்ளது. இவ்விவகாரம் குறித்து கூடுதலாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஹஜ்ஜிற்கு மானியம் தேவையில்லை. இதனை படிப்படியாக குறைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய வழியில் அரசு செல்லவேண்டும் என்று மக்களும் விரும்புகின்றனர். சொந்த பணம் மட்டுமே உபயோகித்து ஹஜ்ஜிற்கு செல்லவேண்டும் என்பதை பெரும்பாலோர் நம்புகின்றனர். அவ்வாறு செல்ல விரும்புவோருக்கு அதற்கான வசதியை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஹஜ் காரியங்களுக்காக தனியாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு முஸ்லிம் அறிஞர்கள் உள்ளிட்டோரிடம் விவாதித்துள்ளது.

 மானியம் இல்லாமல் இயங்கும் விதத்தில் புதிய அமைப்பு உருவாக்கப்படும். ஹஜ்ஜின் பெயரால் கிடைக்கும் மானியம் உண்மையில் விமான நிறுவனங்களுக்கே போய் சேருகின்றன. இதன்
பெயரால் ஒரு சமுதாயம் ஒட்டுமொத்தமாக பழி ஏற்கவேண்டிய சூழல் உருவாகிறது. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
source:thoothuonline.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...