Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 12, 2012

வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைவதால் குவியும் நீர் காக்கைகள்!


காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். இதன் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். சுமார் 16 கி.மீ.நீளமும், 48 கி.மீ சுற்றளவும், 5.6 கி.மீ அகலமும் உடையது. சுமார் 36 வாய்க்கால்கள் மூலம் பாசனம் நடைபெற்று 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தை முன்னிட்டு சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்கு ஏதுவாக தண்ணீர் தேக்குவது வழக்கம்.

தற்போது கடும் வெப்பத்தால் தண்ணீர் விரைவாக குறைந்து வருகிறது. 42.52 கனஅடி தண்ணீர் உள்ளது. இதில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 38 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் மீன் பிடிதொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியில் ஏற்கனவே வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. தற்போது நீர்ப்பரப்பு குறைந்து வருவதால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நீர் காக்கைகள் நீரின் மேற்பரப்பில் உள்ளது. காலை நேரங்களில் ஏரி முழுவதும் நீர்க்காக்கைகள் நிரம்பி காணப்படுவதை சாலையில் செல்பவர்கள் ரசித்து
செல்கின்றனர்.
source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...