Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 04, 2012

சிறுபான்மையின மாணவர்களுக்குகல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு!





அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரித்த கல்வி நிலையங் களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 2012-13ம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இக்கல்வி உதவித் தொகை பெற பெற்றோர்களுக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13ம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சமாக இருவருக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மாணவ, மாணவிகள் உதவித் தொகை விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாளாகும். 

கல்வி நிலையங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை
சரிபார்த்து அதற்கான கேட்புப் பட்டியலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் உரிய படிவத்துடன் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...