Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 09, 2012

முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும்!

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகள் குறித்து ஆராய நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழுவை கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசு நியமித்தது. அக்குழு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு யோசனைகளை தெரிவித்து 2006ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.

அதில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறைந்தது ஒரு இன்ஸ்பெக்டர், அல்லது சப்-இன்ஸ்பெக்டரையாவது நியமிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாரபட்சம் தவிர்க்கப்படுவதோடு, முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியது.

இதன் அடிப்படையில்,முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும்படியும் கடிதத்தில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...