Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 16, 2012

எகிப்தில் ராணுவ புரட்சி?


முற்றிலும் எதிர்பாராத விதமாக இஃவானுல் முஸ்லிமீன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள பாராளுமன்றத்தை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பகுதி இடங்களுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் போட்டியிட இயலும் என்ற சட்டம் மீறப்பட்டதாக கூறி மூன்றில் ஒரு பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை உச்சநீதிமன்ற ரத்துச் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவசரக் கூட்டத்தை கூட்டிய எகிப்து ராணுவ கவுன்சில் நீதிமன்றத்தால் தகுதியிழப்பிற்கு ஆளான பாராளுமன்றத்தை முற்றிலும் கலைப்பதாக அறிவித்தது.  பாராளுமன்றம் கலைக்கப்பட்ட எகிப்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அங்கு உருவாக இருக்கும் அரசியல் சூழல்கள் குறித்து பிரபல அரபு பத்திரிகைகள் தங்களது கணிப்புகளை வெளியிட துவங்கியுள்ளன.
எகிப்தில் ராணுவ புரட்சியின் மணம் வீசுவதாக அல் வஃபத் பத்திரிகை கூறுகிறது. ராணுவத்தின் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளின் தலைமையில் புரட்சி நடக்கலாம் என்று பத்திரிகை தெரிவிக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பை எச்சரிக்கையுடன் சந்திக்கவில்லை என்றால் ஜனநாயக மாற்றத்தை நோக்கிய எகிப்தின் பயணம் தடைப்படும் என எகிப்தில் பிரபல பத்திரிகையான அல் ஜம்ஹூரிய்யா தனது தலையங்கத்தில் எழுதியுள்ளது.
ஜோர்டான் பத்திரிகையான அல்கஹத் கடுமையாக நீதிமன்ற தீர்ப்பை தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.
முபாரக் ஆட்சிக் காலத்தில் மெளனம் சாதித்த நீதித்துறை, தற்பொழுது அரசியல் விளையாட்டை ஆடுவதாக அல்கஹத் குற்றம் சாட்டுகிறது. எதிர்ப்பாளர்களை தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி திரளச் செய்வதுதான் நீதிமன்ற தீர்ப்பு என்று கத்தர் நாட்டின் அல் வத்வான்
பத்திரிகை கூறுகிறது.
இதர அரபு பத்திரிகைகளும் எகிப்து நீதிமன்ற தீர்ப்புக் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டுள்ளன.
இதனிடையே, முபாரக் ஆட்சி காலத்தில் நிலவிய அவசர காலச் சட்டத்தின் நிபந்தனைகளை புனரமைத்த அரசு நடவடிக்கைக்கு பிந்தைய நீதிமன்ற தீர்ப்பு, அதிகாரத்தை தக்கவைக்க ராணுவ அரசு நடத்தும் சதித்திட்டம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
காலாவதி முடிவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வாபஸ் பெற்ற அவசரக்கால சட்டத்தில் நிபந்தனைகள் சிலவற்றை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒரு தினம் முன்பு புனரமைத்தது இத்தகைய சந்தேகத்தை எழுப்புகிறது.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துதல், போக்குவரத்திற்கு இடையூறுச் செய்தல், உத்தரவுகளை புறக்கணித்தல் ஆகிய குற்றங்கள் புரிவோரை கைது செய்ய பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் அளித்து சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இஃவானுல் முஸ்லிமீன் உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
source:thoothuonline.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...