பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ரியோ +20 என்ற பெயரில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடந் தது. அதையொட்டி சுற் றுச்சூழல் திட்ட அறிக்கையை அய்.நா. நேற்று வெளியிட்டது. அதில் இடம்பெற்ற அம்சங் கள் வருமாறு:
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் தயா ராகும் உணவு பொருட் களில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களால் பயன் படுத்தப்படாமலே வீணடிக்கப்படு கிறது. போக் குவரத்தில் ஏற்படும் இழப் பில் ஒரு பகுதி வீணாகிறது. நுகர்வோர் தெரிந்தே வீணாக்குவது மீதி. வட அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மட்டும் ஆண்டுதோறும், சாப்பிடக்கூடிய நிலையில் சுமார் 22.2 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது. சுவீடனைச் சேர்ந்த புட் அண்ட் பயோடெக் னாலஜி கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் குழு இதற்கான ஆய்வை கடந்த ஆண்டில் நடத்தியது. அதன்படி, உண வுப் பொருட்கள் அவை உற்பத்தியாகும் விளை நிலத்தில் தொடங்கி, போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு, சந்தை என தொடர்ந்து வீட்டின் உணவு மேசை வரை வீணடிக்கப்படுகின்றன. குறிப்பாக, நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினர் அதிகமுள்ள நாடுகளில் உணவுகள் அதிகபட்சம் வீணாகின் றன.
மனிதன் சாப்பிடக் கூடிய
நிலையில் உள்ள உணவுகளின் ஒரு பகு தியை பயன்படுத்தி அப் படியே தூக்கியெறியும் நிலை உள்ளது. மாறாக, ஏழை நாடுகளில் நுகர்வோரின் கைக்கு வந்து சேரும் முன்பே உணவின் ஒரு பகுதி வீணடிக்கப் படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அய்.நா. அதிர்ச்சி தகவல் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 130 கோடி டன் உணவு வீணாகிறது. அமெரிக்கர்கள் மட்டும் உணவில் 25 சதவீதத்தை குப்பையில் எறிகின்றனர். *அய்ரோப்பா, அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 300 கிலோ உணவை வீணடிக்கிறார். *இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் இது 170 கிலோவாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...