சிதம்பரம் சமூக நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வரை கல்லூரியிலேயே உதவி தொகை பெற்றனர். இந்த ஆண்டு முதல் சமூக நலத்துறை மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உழவர் பாதுகாப்பு திட்ட கார்டு வைத்துள்ள குடும்பத்தில் இருந்து கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., சான்று, கல்லூரியில் படிக்கும் ஆதாரச் சான்று, குடும்ப உழவர் கார்டு, ஜாதிச் சான்று நகலுடன் தாசில்தார் அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு துறையில் கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்களை பார்வையிட்டு உதவித் தொகை வழங்கப்படுகிறது. நேற்று சிதம்பரம் சமூக நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக் கவும், கல்வி உதவி தொகை பெறவும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
பொறியியல் படிக்கும் மாணவருக்கு 2250 ரூபாய், மாணவிக்கு 2750 ரூபாய், பட்டப்படிப்பு படிக்கும் மாணவருக்கு 1750 ரூபாய், மாணவிக்கு 2250 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை
பெற்று உதவி தொகைக்கான காசோலைகளை சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ராமச்சந்திரன் வழங்கினார்.
thanks:cuddalore news

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...