Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 04, 2012

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதியில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில், தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 64 விடுதிகள் செயல்படுகின்றன.

4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளி விடுதியிலும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரி விடுதியிலும் சேர தகுதி உடையவர்கள். விடுதியில் எந்த செலவும் இல்லாமல், உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும், 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு செட் சீருடைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதியில் சேர தகுதிகள்: பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பள்ளி 8 கி.மீ. மேல் இருக்க வேண்டும். (தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது).

விண்ணப்பங்களை விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.6.2012-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.7.2012-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். விடுதியில் சேரும்போது மட்டும் சாதி, வருமான சான்று
வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இச்சலுகையை மாணவ, மாணவிகள் பெற்று பயனடையுமாறு ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...