காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் இணையதள கோளாறு காரணமாக மின்சார கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு மின்சார கட்டணத்தை இணையதளம் மூலம் கட்ட அறிவுறுத்தியது. இதன்படி கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகம், தனியார் கணினி மையங்களில் செலுத்தினர். இதன் காரணமாக குறிப்பிட்ட அலுவலகத்திற்கு சென்று நாள் முழுவதும் காத்திருந்து மின் கட்டணம் செலுத்தும் நிலையிலிருந்து விடுதலை கிடைத்ததாக கூறப்பட்டது. மின் இணைப்பு கட்டணத்திற்காக மட்டுமே சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு செல்வது தவிர்க்கப்பட்டது. வெளியூர்களுக்கு செல்பவர்கள் அதே பகுதியில் தங்களுடைய கிராமத்திற்கு அளிக்கப்பட்ட கோடு நம்பரையும் தன்னுடைய வீட்டின் மின் இணைப்பு எண்ணையும் கூறி செலுத்தினர். இதன் காரணமாக நேரம் மிச்சமானது என்று கூறப்பட்டது. மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதள சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் ஏற் பட்ட பிரச்னை காரண மாக சில தினங்களாக தனி யார் இணையதளம் செயல்படவில்லை. இதனால் மின் இணைப்பு கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் இணைய தள கோளாறை சரிசெய்து ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நிலையை
பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
source:dinakaran

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...