Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 21, 2012

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை!

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் விதமாக பொதுப்பணித்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் கொள்ளிடக்கரையோரத்தில் உள்ள கிராமங்களில் சிலவற்றில் கொள்ளிடம் ஆற்றில் திருட்டு மணல் அள்ளும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. மணல் தட்டுபாடு ஏற்படும் காலங்களில் மணல் கடத்தலில் இப்பகுதியை சேர்ந்த சிலர் ஈடுபட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.

திருட்டு மணல் அள்ளுவதை தடுக் கும் பொருட்டு பொது பணித்துறையினர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் மணல் அள்ளுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த பாதைகளை கனரக இயந்திரங்கள் மூலம் சேதப்படுத்தி தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று சி. அரசூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் ஏற்றுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் பள்ளம் தோண்டிதுண்டித்துள்ளனர்.
source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...