Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 19, 2012

சட்டக்கல்லூரி விண்ணப்பங்கள் தேதி நீட்டிப்பு ...


எங்கெல்லாம் சட்டத்தின்படிஆட்சி நடக்கிறதோஅல்லது குறைந்தபட்ச மரியாதை சட்டத்திற்கு கொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அதிக மரியாதையும் அதற்கேற்ற வருமானமும் உள்ளது.


ஆனால் இன்றைய இந்தியாவில் பலர் இந்த துறையை தேர்ந்தெடுக்க தயங்குவதைப் பார்க்கிறோம்உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடானஇந்தியாவில் இப்படிப்பை தேர்ந்தெடுப்பதில் உள்ள தயக்கம் என்பது சற்று கவலைக்குரியது. ஒரு மனிதன் தன் வாழ்வின் இக்கட்டானசூழ்நிலைகளில் நம்பி இருக்ககூடிய  தொழில்களில் வக்கீல்தொழிலும் ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


+2 தேர்வில் முதல் இடத்தில் வரும் மாணவர்களிடம் நீங்கள் அடுத்து என்ன படிக்க போகிறீர்கள் என்று கேட்டால் டாக்டர் என்றும் எஞ்சினியர்என்றும் சொல்வார்கள்ஆனால் Professional Courses வரிசையில் வரும் சட்டத்துறை குறித்து அவர்களுக்கு ஏனோ தோன்றுவதில்லைஆனால்இத்துறை பல்வேறு வாய்ப்புகளை தன்னுள் மறைத்து வைத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் பல சரித்திரங்களை படைத்து கொண்டுள்ளது.


தமிழகத்தை பொறுத்த வரையில் சட்டப்படிப்பை படிக்க அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகம் பல்வேறு பாடதிட்டங்க்களை வைத்து உள்ளது,இந்த வருடத்திற்கான படிப்புக்கான விண்ணப்படிவங்கள் சென்ற மாதம் 28.05.2012 ல் கொடுக்கப்படுகின்றது.
  
தமிழ்நாடு அரசு சட்டப்பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்படும் படிப்புகள் பின் வருமாறு :

B.A.,B.L (Hons.)

B.L. (Hons.)
M.L
P.G.Diploma and Cert. Course (DDE)
yr B.A.B.L(Affiliated Govt. Law Colleges)
yr B.L. (Affiliated Govt. Law Colleges) 

விண்ணப்பங்கள் பெற வேண்டிய முகவரி :

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கீழுள்ள வலைத்தளத்திற்கு செல்லவும்

அல்லது

கீழ்கண்ட முகவரியில் நேரடியாகவோ 
அல்லது தபால் மூலமாகவோ பெறலாம்நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக பெற்றுக் கொள்வதுசிறந்தது,  விண்ணப்பங்களை பெறுவதற்கு Demand Draft தேவை, DD எடுக்க வேண்டிய முகவரி “ The Registrar, The Tamilnadu Dr.Ambedkar Law University, Chennai”, தேசியமயமாக்க பட்ட வங்கிகளில் சென்னையில் செலுத்த தக்க வகையில் எடுக்க வேண்டும்.

விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியிலோ அல்லது கீழ்கண்ட அரசு சட்டக்கல்லூரிகளிலோ பெற்றுக்கொள்ளலாம்.

The Registrar,
The Tamil Nadu Dr.Ambedkar Law University,
“Poompozil”, No 5, Dr.DGS Dinakaran Salai,
Chennai – 28
  
விண்ணப்பங்கள் கிடைக்கும் அரசு சட்டக்கல்லூரிகள் :

(i) Dr. Ambedkar Govt. Law College, Chennai-600104
(ii) Govt. Law College, Madurai-625020
(iii) Govt. Law College, Trichy-620023
(iv) Govt. Law College, Coimbatore–641046
(v) Govt. Law College, Tirunelveli–627011
(vi) Govt. Law College, Chengalpattu–603001
(vii) Govt. Law College, Vellore–632006 (only 3 Year B.L. Degree Course is offered).

விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி 15 ஆம் தேதியிலிருந்து 22-06-2012 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் விலையும் கீழே...

COURSESGeneral CategorySC/ST CategoryLast Date for Submission
In PersonBy PostIn PersonBy Post
B.A.,B.L (Hons.) 1000110050060022.06.2012
B.L. (Hons.)1000110050060030.06.2012
M.L 1000110050060022.06.2012
P.G.Diploma and Cert. Course (DDE)50060025035022.06.2012
5 yr B.A.B.L(Affiliated Govt. Law Colleges) 500/- 600/- 250/- 350/- 15.06.201250060025035022.06.2012
3 yr B.L. (Affiliated Govt. Law Colleges) 500/- 600/- 250/- 350/- 30.06.201250060025035030.06.2012


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களோடு சமர்பிக்க வேண்டிய முகவரி கீழே தரப்பட்டுள்ளதுஅல்லது மேற்கூறப்பட்டுள்ள சட்டக்கல்லூரிகளின் முதல்வர்களிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.

The Chaiman,
Law Admissions ,2012-2013
The Tamil Nadu Dr.Ambedkar Law University,
“Poompozil”, No 5, Dr.DGS Dinakaran Salai,
Chennai – 28

எல்லாம் வல்ல இறைவன் உங்களின் கனவுகளை நினைவாக்கி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற அருள் புரிவானாக!
கல்வி தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் மாணவரனியை வாரநாட்களில் மாலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். வாரஇறுதியில் மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

9042009400
8925365525
9940205959
9884810993

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...