ஒரு நாடு விடுதலை அடையும் போது உலகின் பெரும்பாலான் மக்கள் அதற்காகசந்தோஷப்படுவதுதான் இயல்பு. ஆனால் ஒரு நாடு தன் பிறப்பை உலகுக்குஅறிவித்தபோது அதனால் சந்தோசப்பட்டவர்களை விட,கவலையடைந்தவர்களும், கோபப்பட்டவர்களும்,குழப்பம் அடைந்தவர்களும்தான் அதிகம்.இந்தியா கூட அந்த நாட்டை ஒரு நாடாக அப்போதுஅங்கீகரிக்கவில்லை, அந்த நாடு சந்தேகம் இல்லாமல்
இஸ்ரேல்.
இஸ்ரேல் என்கின்ற இந்த யூத நாடு உலகில் உருவான கதையை அறிந்தவர்கள்இதை ஒரு நாடாக ஒரு காலத்திலும் அங்கீகரிக்க மாட்டார்கள். சொந்த மண்ணில்சந்தோஷமாய் வாழ்ந்த ஒரு கூட்டத்தை துரத்தியடித்து, தீவிரவாதிகள் பட்டம்கட்டி தலைமுறை தலைமுறையாக அந்த அப்பாவி மக்களுக்கு வலியையும்வேதனையும் பரிசளிக்கும் ஒரு பாசிச சக்தி இஸ்ரேல்.அதனுடைய முகத்தில்கரியை பூசுகின்ற வகையில் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
1983 ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது பெற்றஒரு நாவல் “The Color Purple" இந்த நாவலின் ஆசிரியர் அமெரிக்க கறுப்பினஎழுத்தாளர் அலிஸ் வால்க்கர் (Alice Walker), இந்த நாவல் ஒரு எளிய ஆப்பிரிக்கஅமெரிக்க பெண்மணியை பற்றிப் பேசக்கூடியதாகும், இந்த நாவல் ”ஜூராஸிக்பார்க்”பட புகழ் இயக்குநர் ஸடீவன் ஸ்பீல்பெர்கால் திரைப்படம் ஆகவும் 1985ல்எடுக்கப்பட்டது.
உலக அளவில் பெரும் பெயர் பெற்ற இந்த நாவலை யூதர்களின் மொழியான“ஹீப்ருவில்”மொழிபெயர்த்து விற்பனை செய்ய
இஸ்ரேலை சார்ந்த “யெடியட்புக்ஸ்” எனும் பதிப்பகம் முயற்ச்சித்தது. ஆனால் தன்னுடைய புத்தகத்தைஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்து இஸ்ரேலில் விற்பனை செய்யக்கூடாதுஎன அலிஸ் வால்க்கர் தடை செய்துள்ளார்.
இனப்பாகுபாடுகளை சாடும் தன் புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு முன்னால்இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்திலும் அரபு பேசும் முஸ்லீம்களுக்கு நடத்தும்கொடுமைகளை இஸ்ரேல் நிறுத்தி கொள்ள வேண்டும். பாலஸ்தீனியர்கள்குறித்த தனது அரசியல் நிலைப்பாட்டை இஸ்ரேல் மாற்றிக்கொள்ளும் வரை தன் புத்தகத்தை வெளியிடக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
ஒரு கருப்பின பெண்ணாக அமெரிக்காவில் வெள்ளையர்களின் இனக்கொடுமைகளை நான் சந்தித்திருக்கிறேன் ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு காட்டப்படும் இனப்பாகுபாடு என்பது மிகக்கொடுமையானது என அவர் பதிவு செய்துள்ளார்.மேலும் தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இனத்தவரினால் மிகப்பெரும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட கருப்பின மக்கள் கூட “எங்களுக்கு வெள்ளையர்கள் செய்த கொடுமையை காட்டிலும் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் யூதர்கள் செய்யும் கொடுமை மிக பயங்கரமானது” என சொல்லுகிறார்கள்
இது குறித்து அலிஸ் வாக்கர் அந்த இஸ்ரேல் பதிப்பகத்துக்கு கடந்த ஜுன் 9 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவாதாவது “ என்னுடைய புத்தகத்தை உங்கள் நாட்டு மக்கள் படித்தார்கள் என்பதை கேட்டு சந்தோஷம் அடைவேன் குறிப்பாக அமைதிக்கும்,நீதிக்கும் போராடிய இளம் பாலஸ்தீன, இஸ்ரேல் மக்கள் படித்தார்கள் என்று அறிந்தால் இன்னும் சந்தோஷம் அடைவேன், அது என்றைக்காவது நடக்கும் எனவும் நம்புகிறேன் ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்று இஸ்ரேலில் இல்லை. எனவே என்னுடைய புத்தகத்தை ஹீப்ரு மொழியில் மொழி பெயர்ப்பதை நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
உலக அரங்கில் மரியாதையோடு பார்க்கப்படும் ஒரு எழுத்தாளர் இவ்வாறு கூறியிருப்பது இஸ்ரேலுக்கு தலைக்குனிவை எற்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் 2011 அன்று தான் அளித்த நேர்காணலில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உலகின் தீவிரவாத இயக்கங்கள் என்று கூறியவர் அலிஸ் வால்க்கர். இது போன்ற நடுநிலையாளர்கள் மற்றும் நல்லவர்களின் எதிர்ப்புகள் ஈனப்பிறவி இஸ்ரேல் குறித்த உலகின் பார்வையை மாற்றும் பாலஸ்தீன முஸ்லீம்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும். இன்ஷா அல்லாஹ் !
- நி.அல் அமீன்
tntjமாணவர் அணி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...