Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 26, 2012

முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட​​ம்!

7 வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் பெண்கள் அமைப்பினர் சென்னை, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நேற்று(ஜுன் 24) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை அதிகாரிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு, கருணையில் கூட அரசின் அப்பட்டமான பாரபட்சம் ஆகியவற்றால் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்பட்டு விட்டது. மேலும், விசாரணை சிறைவாசிகளாக இருந்தபோது ஜாமீன் கூட மறுக்கப்பட்டு நீண்ட நெடும் சிறைவாசத்தை அப்போதே தண்டனையாக அனுபவித்து விட்டு அவர்கள் தண்டனைக் கைதிகளாக இப்போதும் சிறையில் வாடி வருகின்றனர். பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 200க்கு மேற்பட்டவர்களில் ஒருவர் கூட மதரீதியாக குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கோ, தண்டனைகளோ சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொது மன்னிப்பில் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்பது தற்போதைய அ.தி.மு.க.அரசின் கொள்கைக்கு விரோதமானதல்ல. அரசின் பொது மன்னிப்பு என்பது முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாது மற்ற சிறைவாசிகளுக்கும் கிடைத்திட
வேண்டும். ஆகவே விடுதலைக்குத் தகுதியுள்ள அனைத்து சமூகங்களை சேர்ந்த ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திட வேண்டும் எனவும், முஸ்லிம் சிறைவாசிகளின் அவலம் நீங்கிட வேண்டுமெனில் அரசு வழங்கிடும் விடுதலை ஒன்றே தீர்வு என்ற நிலையில் 7 ஆண்டுகள்கழிந்த 49 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்திடுமாறும் பாதிக்கப்பட்ட பெண் சமூகத்தின் சார்பாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இந்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
thanks:thoothuonline

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...