Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 12, 2012

சீனாவை விட, இந்தியாவில் விமான கட்டணம் 300 சதவீதம் அதிகம்

பெய்ஜிங்:சீனா உள்ளிட்ட சில நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விமானக் கட்டணம், 200 முதல் 300 சதவீதம் வரை அதிகமாக உள்ளது என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்தார்.உலகிலேயே, விமான சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு, சேவை வரி விதிப்பது இந்தியாவில் மட்டும்தான்.

இருப்பினும், இந்த நடவடிக்கையால், விமான சேவை நிறுவனங்கள் வளர்ச்சி காணவில்லை. சீனாவில், விமான சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவையாகவே உள்ளன. இதனால், விமான சேவை நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் எளிதாகக்கிடைக்கின்றன.மேலும், இந்திய விமான நிறுவனங்கள், விமான எரிபொருளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பயன் ஒன்றும்
ஏற்படப்போவதில்லை. இவ்வாறு நரேஷ் கூறினார்.
source:Dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...