Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 31, 2013

முசாஃபர்நகரில் மீண்டும் கலவரம்:4பேர் பலி!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் வகுப்பு கலவரம் மூண்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். முசாஃபர் நகர் மாவட்டம் முகமத்புரைசிங், ஹூசைன்பூர் கிராமங்களில் வசிக்கும் இரு சமூகத்தினருக்கு இடையே நேற்றிரவு இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், அப்ரோஸ், மெகர்பான், அஜ்மல் ஆகிய மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகமத்புரைசிங் கிராமத்தில் சிலர் புகுந்து

ஆப்கானிஸ்தான் போர் வெற்றி, தோல்வியின்றி முடிவு - ஆஸ்திரேலிய பிரதமர் ஒப்புதல்!

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் சென்றார். உருஸ்கான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமிற்குச் சென்ற அவர், அங்குள்ள ஆஸ்திரேலிய வீரர்களிடம் உரையாற்றினார். நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது, இதில் நமக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை என்று டோனி அபோட் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், அல் காய்தா இயக்கத்தினரை எதிர்த்துப் போரிடும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் ஆஸ்திரேலிய படையினரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்கியிருக்கும் ராணுவ முகாம், உருஸ்கான் மாகாணம், தாரின் கோட் பகுதியில் உள்ளது. அங்கு திங்கள்கிழமை வந்த டோனி அபோட்டை, ஆப்கான் உள்துறை அமைச்சர் முகமது ஒமர் தௌத்ஸாய் வரவேற்றார். வரும் 2014-ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என அறிவிக்க ப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தனது நாட்டு ராணு வீரர்களிடையே பிரதமர் டோனி அபோட் பேசியதாவது: “ஆஸ்திரேலியாவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வருகிறது. இதில் நமக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. ஆனால், இங்கு நாம் ஆற்றியுள்ள பணிகள் காரணமாக ஆப்கானிஸ்தானின் நிலை மேம்பட்டுள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆப்கன் போர் மிகவும் சிக்கலாக இருந்தது. ஆஸ்திரேலிய படையினரை வாபஸ் பெறும் முடிவு

அக்டோபர் 30, 2013

இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க வேண்டாம்:கடலூர் மாவட்ட கலெக்டர்

இரவு 10:00 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையில் அதிக சத்தமுள்ள பட்டாசுகளைத் தவிர்த்து, விபத்தில்லா தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளை அளித்துள்ளது. அதன்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.

குடிசைகள் மற்றும் எளிதில் தீப்பற்றும்

உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் சச்சின் டெண்டுல்கர்!

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார். ஹரியாணா அணிக்கு எதிராக ரோடாக்கில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், மும்பை அணிக்காக நிதானமாக ஆடிய சச்சின் தனது 115-வது 'முதல் தர' அரைசதத்தைப் பதிவு செய்தார். நேற்று ஆட்டநேர முடிவில் மும்பை அணி 75 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.

சச்சின் 122 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 55, குல்கர்னி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹரியாணாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை வெற்றி பெற இன்னும் 39 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் இன்றும் சச்சின் சிறப்பாக விளையாடினார். இறுதியில் 4 விகெட் வித்தியாசத்தில் மும்பை அணி

அக்டோபர் 29, 2013

ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வுக்கு அழைப்பு!

இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர்வதற்காக நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2013 தேர்வு எழுத பிளஸ் 2 படித்த அறிவியல் குருப் படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு: ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரன்டிஸ் தேர்வு- 2014.

மொத்த காலியிடங்கள்: 42.
வயது: 1.1.2014 அன்று 17 லிருந்து 21க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1993க்கு முன்பாகவோ 1.1.1997க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது.

கல்வித்தகுதி: கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு முதல் அல்லது 2ம் வகுப்பில் பிளஸ் 2 முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களும்

லால்பேட்டை கைகாட்டி மீன் கடைகளில் ஐஸ் பெட்டிகள் பறிமுதல்!

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கைகாட்டி மீன் கடைகளில் உள்ள ஐஸ் பெட்டிகள் பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமையில் பறிமுதல் செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கைகாட்டியில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அங்கு 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். கடைகளில் பழைய மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திற்குப் புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து பழைய மீன்களை விற்பனை செய்யக் கூடாது என பல முறை வலியுறுத்தப்பட்டும் பழைய மீன்கள் விற்பனை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று காலை லால்பேட்டை பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமையில் மீன் கடைகளில் தீடீர் சோதனை செய்யப்பட்டது. அப்போது பழைய மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்த 3 கடைகளில்

அக்டோபர் 28, 2013

உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் திறப்பு!

உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் இன்று திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் உலக அளவில் 2வது பெரிய பயணிகள் விமானநிலையம் ஆகும்.

 5 ஓடுபாதைகள் கொண்ட இந்த புதிய விமான விமானநிலையத்தில் 160 மில்லியன் பயணிகளை ஆண்டுக்கு கையாள முடியும். மேலும் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் கார்கோ சரக்குகள் வந்து இறங்க முடியும். இந்த விமான நிலையத்தில் முதல் பயணிகள் விமானம் புடாபெஸ்டில் இருந்து வந்திறங்கியது, அதனை விமானநிலையத்தில்

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழக பட்டியல்!

இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், 9 மாநிலங்களில் உள்ள அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 பல்கலைகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, யுஜிசி அதன் இணையதளத்தில் பட்டியலை வெளியிட்டுள்ளது. போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்:

பிகார்
1. மைதிலி பல்கலைக்கழகம், பிகார் தில்லி

2. கம்மார்சியல் பல்கலைக்கழகம்

3. யுனிடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம்

4. ஒகேஷ்னல் யுனிவர்சிட்டி

5 ஏ.டி.ஆர்-சென்ரிக் ஜூரிடியல் யுனிவர்சிட்டி

6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்

கர்நாடகா
1. பாடகங்வி சர்கார் வால்ட் ஒபன் யுனிவர்சிட்டி எஜூகேஷன் சோசைட்டி

கேரளா
1. செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி

மத்திய பிரதேசம்
1. கேசர்வானி வித்யாபிதம்

மகாராஷ்ட்ரா
1. ராஜா அரபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர்

தமிழ்நாடு
1. டி.டி.பி. சமஸ்கிருத

அக்டோபர் 27, 2013

காட்டுமன்னார்குடி கடை தெருக்களில் திருட்டுகளை தடுக்க கண்காணிப்பு கேமிரா!!

காட்டுமன்னார் குடியில் கடை தெருக்களில் திருட்டை தடுக்க போலீசார் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி உள்ளனர்.

தீபாவளி பண்டிகையை யொட்டி காட்டுமன்னார் குடி பகுதியை சுற்றி உள்ள பல்வேறு கிராமத்தினர் காட்டுமன்னார் குடிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இதையடுத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள், திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என கருதி காட்டுமன்னார் குடி பஸ் நிலையம், முக்கிய கடை வீதியான கச்சேரி தெரு, பழைய போலீஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி உள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி காட்டுமன்னார்குடி வியாபாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள், மற்றும் ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி பொருட்களை வாங்கி செல்லும் வகையில் வியாபாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் தங்களது வாகனங்களை பழைய போலீஸ் நிலையம் பகுதியிலும் மற்றும் தாசில்தார் அலுவலகம் அருகிலும் நிறுத்த

வாக்காளர் பட்டியலில் சேர வரும் 31ம் தேதி கடைசி நாள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. பூர்த்தி செய்த படிவங்கள் 31ம் தேதி வரை ஏற்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6ம் தேதி வெளியாகிறது.

2014 ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல்((சிறப்பு சுருக்க முறை திருத்தம்) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டு, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்கள், வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர் 6, 20, மற்றும் 27 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒருஅயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும்.

தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.வடக்கு ஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா,கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கெளதமாலா, குயான, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கைபோன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது.

டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோயின் அறிகுறிகள்! கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, தலைவலி, கண்கள் சிவத்தல், கண்களில் வலி மற்றும் கைகால் வீக்கம். மேற்கண்ட நோய் அறிகுறிகள் உடலில் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அணுகி இரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.

தடுக்கும் முறைகள்:டெங்கு மற்றும் சிக்கன்குனியா காய்ச்சல், பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏடிஸ் என்ற கொசுவினால் பரவுகின்றது. இக்கொசுகள் வீட்டை சுற்றியுள்ள பயன்படுத்தாத பொருட்கள், பாட்டில், பிளாஸ்டிக் கப், ஆட்டுக்கல், தேங்காய் மட்டை, டயர் போன்ற பொருட்களில் தேங்கியிருக்கும் நீரில் உற்பத்தியாகிறது.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்:ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் மற்றும் நீர் சேமிக்கும் பாத்திரங்களை தேய்த்து கழுவி உலர வைத்தல் போன்றகளை செய்து ஏடிஸ் கொசு உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.

பயன்படுத்தாத பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், டயர், உடைந்த பானை, தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பிற பொருட்களை அப்புறப்படுத்டுவதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.

சிமெண்ட் தொட்டி, குடிநீர் தேக்கும்