Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 13, 2011

ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை மத்திய அரசு அலசியப்படுத்தியது - ஆனந்த் பட்வர்தன்

ஆட்சியாளர்களும், போலீசும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட்டு முன்னரே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என தீர்மானித்ததன் விளைவுதான் அஸிமானந்தாவின் வாக்குமூலம் வெளிப்படுத்துகிறது என பிரபல ஆவணப்பட தயாரிப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஆனந்த் பட்வர்தன் தெரிவித்துள்ளார்.

திருச்சூரில் 6-வது விப்ஜியார் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இயக்குநராக வருகைத் தந்துள்ள அவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி வருமாறு:

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பே 1992 ஆம் ஆண்டு "ராம் கீ நாம்" என்ற ஆவணப்படத்தை ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வெளியிட்டேன். தெளிவான ஆதாரங்களுடன் சங்க்பரிவார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிப்பார்கள் என்பதை இந்த ஆவணப்படத்தின் மூலம் உணர்த்தினேன். ஆனால் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அத்வானியின் ரதயாத்திரையும், மோடி நடத்திய கோத்ரா ரயில் எரிப்பும் ஏற்கனவே தீட்டப்பட்ட சதித்திட்டமாகும். 'எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர்! ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள்' என்ற அதிகாரப்பூர்வ பிரச்சாரம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, அவர்களில் சிலர் வழி தவறிச் செல்லவும் காரணமானது.

கேரளாவிலும், மேற்குவங்காளத்திலும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்தின் மிரட்டல்களுக்கெதிராக வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வந்தபிறகுதான் ஊடகங்கள் 'ராம் கீ நாம்' ஆவணப்படம் அளித்த செய்தியை புரிந்துக்கொண்டன. மூன்று தனியார் சேனல்கள் அச்சூழலில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பின. அப்பொழுதும்கூட ஒளிபரப்பு அசோசியேசனின் எதிர்ப்பு தொடரத்தான் செய்தது.

நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான ஒளிபரப்பு அசோசியேசன், இந்த ஆவணப்படத்தைக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ஆபத்து நிறைந்தது என குறிப்பிட்டது.

அரசும், போலீசும் இரண்டுவிதமாக தீவிரவாதத்தை அணுகுகின்றனர். எங்கேயாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் தீவிரவாத இயக்கங்களின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச்சென்று சிறையிலடைத்து கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர்.

மூன்றாம் தரமான சித்திரவதைகள் மூலம் அவர்களை நிர்பந்தப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். நீதிமன்றத்தில் போலியான ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளியாக்கி சிறையிலடைக்கின்றனர். நிரபராதிகள் தண்டிக்கப்படும் பொழுது மக்கள் நீதிபீடத்தின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் உற்பத்திச் செய்யும் தீவிரவாதம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்தியாவை தகர்த்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிரிகளாக பாவிக்கும் அவர்கள் மனிதத் தன்மையற்றவர்களும், ஜனநாயகத்திற்கு எதிரானவர்களுமாவர். ஹிட்லரும், முசோலினியும்தான் அவர்களின் வழிகாட்டிகள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மரியாதை அளித்தது 1979 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கமாகும்.

காந்தியின் படுகொலை மூலம் மக்களால் வெறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஜனதா கட்சி ஆட்சியின் மூலம் தங்களுடைய மரியாதையை பலப்படுத்திக் கொண்டார்கள். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும், இனக் கலவரங்களைக் குறித்தும் விசாரணை நடத்தினால் சங்க்பரிவாரின் ஆக்டோபஸ் கரங்கள் இவற்றின் பின்னணியில் இருப்பதை கண்டறியலாம்.

தங்களது இயக்கத் தலைவர்களையும், உறுப்பினர்களையும், அரசியல் லாபங்களுக்காகவும், பயங்கரவாத யுக்திகளுக்காகவும் கொலைச் செய்யவும் தயங்காதவர்கள்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இந்திய நாட்டு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாத வரலாற்றைக் குறித்த விழிப்புணர்வு ஊட்டவேண்டும். இவ்வாறு பட்வர்தன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆனந்த் பட்வர்தன் தேஜஸ் பத்திரிகையின் ரெஸிடென்ட் எடிட்டரான மறைந்த மனித உரிமை ஆர்வலர் முகுந்தன் தனது உற்ற நண்பர் என தெரிவித்த ஆனந்த் பட்வர்தன், பாசிசத்தோடு சமரசத்திற்கு இடமில்லாமல் போராடிய முகுந்தன் சி மேனன் மனித உரிமை களத்தில் விலைமதிப்பில்லா சேவைகளை புரிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...