Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 18, 2011

சிதம்பரம் பஸ் நிலையத்தில் சிமென்ட் தளம் பணி முடிந்து திறப்பு விழாவிற்கு தயார்

சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம் மற்றும் கழிவுநீர் கால்வாய், பிளாட்பாரம் அமைக்கும் பணி நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.
சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருப்பதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு ஊழியர்கள் தினமும் சிதம்பரம் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையம் வந்து செல்லும் நிலையில் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற சிதம்பரம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாத நிலை இருந்து வருகிறது.
பஸ் நிலையத்தை சீரமைக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இயற்கை இடர்பாடுகள் நிவாரண நிதி ஒரு கோடியே 8 லட்சம் செலவில் பஸ் நிலையத்தின் வடக்கு பகுதி கடந்த ஆண்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தெற்கு பகுதியில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம், வடிகால், பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மணல், ஜல்லி, சிமென்ட் கிடைக்காதது என பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிவந்த நிலையில் பஸ்களை சாலைகளிலேயே நிறுத்த வேண்டிய நிலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து வந்ததுடன், பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதையொட்டி சிதம்பரம் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினார். அதனால் விரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து இறுதி கட்ட பணியாக வண்ணம் பூசும் பணி நடப்பதால் விரைவில் பஸ் நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...