Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 01, 2011

கடலூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

கடலூர் : கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கடலூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும் நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என எஸ்.பி., பகலவன் அறிவித்தார். கடலூர் ஆல்பேட்டை, கலெக்டர் பங்களா, செம்மண்டலம், கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு, உட்லண்ட்ஸ் ஓட்டல் நான்கு முனை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, லாரன்ஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு சிக்னல், வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு, திருவந்திபுரம், கடலூர் - சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் நான்கு பக்கமும் கண்காணிப்பு கேமரா சோதனை ஓட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. கேமராவின் செயல்பாடுகளை எஸ்.பி., பகலவன் நேற்று பார்வையிட்டு விளக்கங்களைக் கேட்டறிந்தார். டி.எஸ்.பி., வனிதா, இன்ஸ்பெக்டர் சுந்தர வடிவேலு, ராமதாஸ், சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, திருவேங்கடம், விசுவநாதன் மற்றும் கார்த்திக் கம்யூனிகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் குழு உடனிருந்தனர். 
இந்த கண்காணிப்பு கேமராவில் லாரன்ஸ் ரோட்டில் 100 மீ., கூத்தப்பாக்கம் ரோடு, தேரடித் தெரு, வண்டிப்பாளையம் ரோட்டில் 15 மீ., தூரம் வரை நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்யக் கூடியது. மூன்று நாட்கள் சோதனை ஓட்டம் நடக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் "ஸ்பீடு டூம்' (சுற்றும் கேமரா) பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...