சென்னை : புதியதாக 14,377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்: தொடக்க, இடைநிலை, மேனிலை பள்ளிகளில் 14377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதில் முதுநிலைப் பட்டதாரிகள் 2682, பட்டதாரிகள் 5790, இடைநிலை ஆசிரியர்கள் 4342, விளையாட்டு, தொழில் ஆசிரியர்கள் உள்பட சிறப்பு ஆசிரியர்கள் 1538, வேளாண் பயிற்றுநர்கள் 25 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
கிராம நூலகங்களில் காலியாக உள்ள 1353 பணியிடங்கள் நிரப்பப்படும். அதில் நூலகர் (நிலை&3) 260, ஊரக நூலகர் 1093 பேர் நியமிக்கப்படுகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 831 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் 34 பேர், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் முதுநிலை விரிவுரையாளர்கள் 34 பேர் நியமிக்கப்படுவார்கள். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்(ஆர்எம்எஸ்ஏ) 344 பள்ளிகளில் தலா ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம், 544 பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்காக 544 ஆய்வக உதவியாளர்கள் என 888 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இந்த ஆண்டே நிரப்பப்படும். அமைச்சுப் பணியாளர்களில் முதுநிலை பட்டம் பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளவர்கள் பணி மாறுதல் மூலம் ஆசிரியர் பணி வழங்கப்படும். இதன்படி 2 சதவீதம் பேர் பணி அமர்த்தப்படுவார்கள். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் அப்போதே சிறப்பு துணைப் பொதுத் தேர்வு எழுதும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், அனைத்து பாடங்களிலும் தோல்வி அடையும் மாணவர்கள் இனிமேல் அந்த கல்வி ஆண்டிலேயே (ஜூன், ஜூலை மாதங்களில் நடப்பது) இந்த சிறப்பு துணைப் பொதுத் தேர்வுகளை எழுதலாம். இந்த திட்டம் இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் போலவே, மாற்றுப் பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட நலப் பள்ளிகள், கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா, சமூக நலப் பாதுகாப்புக்கான சிறார் பள்ளிகள் ஆகியவற்றிலும் வழங்கப்படும்.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, அரசு மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தப்படும். தற்போது இதில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் கல்வித் தகவல் மேலாண்மை(இஎம்ஐஎஸ்) முறை அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் பள்ளி அமைப்பு, ஆசிரியர்கள் விவரம், மாணவர்கள் விவரம் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் தர எண் வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சியும், வாழ்திறன்களையும் பெறும் வகையில் ‘நமது குழந்தைகள் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
ஸ்மார்ட் கார்டு, ஸ்மார்ட் வகுப்பு...
மாணவர்களின் பெயர், பெற்றோர், முகவரி, பெற்றோர் வருவாய், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இடையில் நின்று விட்டால் அந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு பள்ளியில் சேர்க்க இந்த ஸ்மார்ட் கார்டு உதவும். அதேபோல, ஸி1 கோடியே 25 லட்சம் செலவில் 5 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கும் இன்டெர் நெட் வசதி ஏற்படுத்தப்படும். 12000 அரசு பள்ளிகளுக்கு ஸி42 கோடி செலவில் மல்டி மீடியா புரொஜக்டர் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...