Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 28, 2011

மவுனம் காக்கும் தமிழக அரசு மாநகர போக்குவரத்து கழகம் பிரிக்கப்படுமா?

செனனை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை 2 ஆக பிரிக்கும் பணி தொடருமா அல்லது ஒரே கழகமாக செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்று செயல்பட்டு வந்த மாநகர போக்குவரத்துக் கழகம், 1994ம் ஆண்டு நிர்வாக வசதிக்காக பல்லவன் மற்றும் அம்பேத்கர் போக்குவரத்துக் கழகம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது.
பின்னர், 2001ம் ஆண்டில் மீண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டு, மாநகர போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழக எல்லையாக முதலில் தாம்பரம், பூந்தமல்லி, கோவளம், செங்குன்றம் ஆகியவை மட்டுமே இருந்தது.
தற்போது, பயணிகளின் வசதி கருதி எல்லை விரிவடைந்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், மகாபலிபுரம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய புறநகர் பகுதி களுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
எனவே, நிர்வாகம் செய்வதில் பெரும் சிரமமாக இருப்பதால், பழையபடியே மீண்டும் மாநகர போக்குவரத்துக் கழகத்தை 2 ஆக பிரிக்க, கடந்த திமுக அரசு முடிவு செய்தது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் அயனாவரத்தில் ஏற்கனவே இருந்த கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அலுவலகங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது, அந்த கட்டிடத்தில் ஆர்டிஓ அலுவலகம் செயல்படுகிறது. இதற்காக தனி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மீண்டும் 2 ஆக பிரிக்கப்படுமா அல்லது ஒரே கழகமாக செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு மவுனமாக இருக்கிறது; எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...