சென்னை : அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க புதிய திட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 04ம் தேதியன்று நடப்பு நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதம் சட்டமன்றத்தில் இன்று துவங்கியது. விவாத நேரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., நஞ்சப்பன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா அறிக்கைகள் சிலவற்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது சென்னை நகரின் சுற்றுப்புற தூய்மை குறித்து கடந்த வாரம் ஹெலிக்காப்படர் மூலம் ஆய்வு செய்தேன்; அப்போது சென்னை நகரின் பல பகுதிகளில் குப்பைகளும், கழிவுநீர்களும் அகற்றப்படாமல் தூய்மைக்கேடு விளைவித்து வருவதை கண்டேன்; சென்னை நகரில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றை அகற்ற அடுத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அதற்கு நிரந்தர தீர்வு காணவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்; இரவு நேரங்களில் உயர்மின் அழுத்தத்தில் இயங்கும் பெரிய தொழில்சாலைகளுக்கு இதுவரை இருந்து வந்த 90 சதவீத மின்வெட்டு இன்று முதல் 20 சதவீதம் குறைக்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்; குடிநீர் வசதி இல்லாத குடியிருப்புக்கள் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...