Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 04, 2011

தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 912 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசு, தனது இலவச லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 912 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்ததாவது:

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த பொன்னாளான செப்டம்பர் 15-ந்தேதி அன்று இத்திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும். ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் குறிப்பாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நன்மைகளைப் பெறும் வகையில் கணினிப் பயன்பாட்டில் அவர்களது அறிவுநுட்பமும், திறனும் மேம்படச் செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.
2011-2012-ம் ஆண்டில் தகுதியுள்ள மாணவர்களுக்கு 9.12 லட்சம் மடிக் கணினிகளை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம். இந்த திருத்த வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ. 912 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம்:

பொது விநியோகத் திட்டம் தொடர்பாக நிதியமைச்சர் கூறியதாவது:

முந்தைய அரசால் கலைக்கப்பட்ட 5 எல்லையோர ரோந்து படைகள் மீண்டும் புதுப்பிக்கப்படும். எல்லைப் பகுதிகளில் அரிசி கடத்தலை தடுப்பதற்காக, ஒரு புதிய உணவு வழங்கல் குற்றத்தடுப்பு பிரிவு பொள்ளாச்சியில் ஏற்படுத்தப்படும்.

இன்றியமையாப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்குவதனால் ஏற்படும் கூடுதல் மானியத்தையும் கணக்கில் கொண்டு 2011-2012 ஆம் ஆண்டிற்கு உணவு மானியத்திற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ. 4,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது விநியோக திட்டத்தை செம்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, மசாலாப் பொட்டலங்கள் ஆகியவற்றை சலுகை விலையில் வழங்கும் பொது விநியோக சிறப்புத் திட்டத்தை 31.12.2011 வரை இந்த அரசு நீட்டித்துள்ளது.

விலை ஏற்றத்தின் போக்கை தொடர்ந்து கண்காணித்து பொருட்களில் நிலையற்ற விலை மாற்றங்கள் ஏற்படும்போது மத்திய அரசின் மூலமாக முன்பேர வர்த்தக ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அத்தகைய பொருட்களை முன்பேர வர்த்தக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வோம்.

இன்றியமையாப் பொருட்களின் விலை அளவுக்கு அதிகமாக உயரும்போது அவற்றை கொள்முதல் செய்து கூட்டுறவு பண்டக சாலைகள் மூலமாக நுகர்வோர்களுக்கு அடக்க விலையில் வழங்குவதற்கு ஏதுவாக ரூ. 50 கோடி தொடக்க நிதி இருப்புடன் கூடிய ஒரு விலை கட்டுப்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...