Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 08, 2010

இடுப்பு வரைதான் உடம்பு !!


பீஜிங் : ஆரோக்கியம், பணம் என்று எல்லாம் இருந்தும் சிலர் வாழ்க்கையை அனுபவிக்காமல் புலம்பித் திரிவார்கள். ஆனால், சீனாவைச் சேர்ந்த பெங் சுலின் கால்களை இழந்து, இடுப்பு வரையிலான செயல்பாடுகளுடன், தொழில் நடத்தி அசத்தி வருகிறார். சீனாவில் ஹூனான் மாகாணத்தை சேர்ந்தவர் பெங் சுலின். வயது 78.

கடந்த 1995ம் ஆண்டில் ஷென்லென் என்ற இடத்தில் சரக்கு ஏற்றி வந்த டிரக் மோதியதில் இரு கால்களையும் இழந்தார். இதற்குப் பின் இரண்டு ஆண்டுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஏறக்குறைய இவரது உடம்பின் ஒவ்வொரு முக்கிய உள் உறுப்புகளை வேறு முறையில் இயக்க ஆபரேஷன் செய்து சரி செய்தனர். தற்போது இவரது உயரம் வெறும் 2 அடி, 7 இஞ்ச் தான். கைகளால் பயிற்சி செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்.

இவருடைய கஷ்டத்தை கருத்தில் கொண்டு பீஜிங்கில் உள்ள சீன மறுவாழ்வு ஆராய்ச்சி மையம் ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியது. அரை முட்டை வடிவ சாதனத்துடன், இரண்டு ஸ்டீல் கம்பிகள் இணைக்கப்பட்டு, ஷூ பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பக்கெட்டில் இவர் அமர்ந்து கொள்கிறார். இரு கேபிளால் இணைக்கப்பட்டு இருக்கும் கால்கள் இவரை இயக்குகின்றன. இந்த சாதனத்தில் அமர்ந்து நடந்து அனைவரையும் அசத்துகிறார். இந்த சாதன உதவியுடன் பெங் சுலின் நடப்பது மருத்துவ உலகிற்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது வயதில் இருப்பவர்களைக் காட்டிலும் இவரது உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை துணை தலைவர் லின் லியு கூறியுள்ளார். உடல் ஊனத்தால் சோர்ந்து விடாமல் ‘ஹாப் மேன் & ஹாப் பிரைஸ் ஸ்டோர்’ என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்துகிறார். செயற்கை உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டவர்களுக்கு ‘ரோல் மாடல்’ ஆக, சக்கர நாற்காலியில் அமர்ந்து, ‘ஊனத்தில் இருந்து எப்படி மீள்வது’ என்று சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...