Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 06, 2010

அமெரிக்க சிறைகளில் கற்பழிப்புகள்!!

காங்கோவில் நடைபெறும் கும்பல் கற்பழிப்புகளைப் பற்றி நேரடி அறிக்கை வெளியிட அமெரிக்க முன்னணி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்லும். ஆனால் தங்கள் சொந்த நாட்டில், அதுவும் சிறைகளில் நடைபெறும் கற்பழிப்புகள் பற்றி அந்தப் பத்திரிக்கைகள் பராமுகம் காட்டும்.
சிறைக்கைதிகளிடையே மட்டுமல்லாது சிறை அதிகாரிகளும் ஆண்/பெண்/சிறுவர் கைதிகளை பாலியல் சுரண்டலுக்குட்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதை அங்கு இப்போது மனித உரிமை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தத் துவங்கியுள்ளனர்.

ஆண்டொன்றிற்கு சுமார் 1,40,000 சிறைக்கைதிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் என்பது 'ஸ்டாப் பிரிசனர் ரேப்' என்ற அமைப்பின் புள்ளிவிவரமாகும்.

2008, 2009ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க சிறைகளில் உள்ள சுமார் 88,500 பேர், ஆண்களும் பெண்களும் உட்பட பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

சிறுவர்களை பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தும் எண்ணிக்கை இதனைவிட அதிகம். அதாவது சிறைப்படுத்தப்படும் 8 சிறுவர்களில் குறைந்தது ஒருவர் தினமும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். அதாவது இந்தப்புள்ளி விவரங்கள் துல்லியமாக வெளியிடப்பட்டால் அங்கு வெகுஜன ஆர்பாட்டமே உருவாகிவிடுமென்று பத்தி எழுத்தாளரான மார்கரெட் கிம்பர்லி தெரிவிக்கிறார்.

பெரியோரை அடைக்கும் சிறைகளில் அடைக்கப்படும் சிறுவர்கள் பெருமளவு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதால் அங்கு சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.

ஆண் கைதிகளும், பெண் கைதிகளும் தனித்தனியாக அடைக்கப்படுவதால் பாலியல் பலாத்காரம் பெரும்பாலும் ஒற்றைப் பாலின பலாத்காரமாகவும் இருந்து வருகிறது.

சிறைப் பாலியல் பலாத்காரங்களைப் பற்றிப்பேசும் போது உலகின் மிகப்பெரிய சுதந்திர ஜனநாயக நாடாகக் கருதப்படும் அமெரிக்கா எப்படி சிறைகளை பெருமளவு உருவாக்கி வருகிறது என்பது பற்றிய விவாதமாக மாறும்.

குறிப்பாக அதிகம் சிறையிலடைக்கப்படுவது கறுப்பர்களே. இதனை பல புள்ளிவிவரங்கள் சந்தேகமற நிரூபித்துள்ளன. அமெரிக்கச் சிறைகளில் உள்ள சுமார் 20 லட்சம் கைதிகளில் 50% கறுப்பர்களே.

அனைவருக்கும் சுதந்திரம் என்று தற்பெருமை அடித்துக் கொள்ளும் அமெரிக்கா உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டையே கொண்டுள்ளது. ஆனால் உலகம் முழுதும் உள்ள சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் 25% அமெரிக்க சிறைகலில் உள்ளனர் என்றால் நாம் அந்தச் சுதந்திர நாட்டைப் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை!

சிறையில் கற்பழிப்பை அமெரிக்க சிறை அதிகாரிகள் வேண்டுமென்றே அனுமதிக்கின்றனர். காரணம் பாலியல் பலாத்காரங்கள், சுரண்டலகள் கைதிகளை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது என்ற ஒரு வெட்கங்கெட்ட நம்பிக்கை வேறு அவர்களிடம் உள்ளது.

அதாவது எந்த அளவுக்கு சிறையில் கற்பழிப்பு என்ற விவகாரம் எந்த ஒரு மன உறுத்தலையும் அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தவில்லை என்பதற்கு உதாரணம் அங்கு வெகுஜனமக்களிடையே உலவி வரும் நகைச்சுவைகளைக் கூறலாம்.

சிறைக்குச் சென்றால் பாலியல் பலாத்காரம் அல்லது கற்பழிப்புகளுக்கு ஆட்பட்டவராகவே ஒருவர் பார்க்கப்படும் அளவுக்கு அங்கு சிறைக் கற்பழிப்புகள் மலிந்து கிடக்கின்றன.

ஆப்கான் தாலிபன்களை நாகரீகமற்றவர்களாகவும் ஈராக் முஸ்லிம்களை தாழ்ந்தவர்களாகவும் காண்பித்து வரும் அமெரிக்க ஊடகங்கள் தங்களை எப்போதும் நாகரீகமானவர்கள், உயர்ந்தவர்கள் என்றே கருதி வருகிறது.

காங்கோவிலோ ஆப்கானிலோ அல்லது பிற இஸ்லாமிய நாடுகளிலோ பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீலிக்கண்னீர் வடிப்பது ஒரு புறம் இருந்தாலும் தங்கள் சொந்த நாட்டில் பெண்களுக்கு, கறுப்பர்களுக்கு, சிறைக்கைதிகளுக்கு நடக்கும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிற பயங்கரங்களை வெளிஉலகுக்குத் தெரியாமல் வெகு சாமர்த்தியமாக மறைத்து வருகிறது.

உலக மக்கள் தொகையில் ஒரு சிறிய விகித மக்கள் தொகையே கொண்டுள்ள ''சொர்க்க பூமியில்", சுதந்திர பூமியில்" உலகிலேயே அதிகம் பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதுதான் அமெரிக்கச் சுதந்திரம்! காட்டுமிராண்டிகளின் சுதந்திரம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...