அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பு நாள் நெருங்குவதைத் தொடர்ந்து, மின் ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்களை செய்தி ஒளபரப்புவோர் கூட்டமைப்பு (NBA) வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து ஊகமான தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் காண்பிக்க வேண்டாம் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
அயோத்தி தொடர்பான செய்திகளைத் தரும்போது கூடுதல் கவனம் தேவை. இச்செய்தி தொடர்பாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போது உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் ஒளிபரப்பக் கூடாது என்று அந்த வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அனைத்து செய்திகளையும் ஒளிபரப்பும்போது, சமூக ஒற்றுமை பேணக்கூடிய வகையில் பொது நலனுடன் ஒளிபரப்ப வேண்டும். நமது நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கிடையே மதச்சார்பின்மையைக் காப்பாற்றக் கூடிய அளவில் செய்திகள் ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...