Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 23, 2010

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு!


அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக‌த்‌தில் 70 ஆயிரம் காவல‌ர்க‌ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் நாளை ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்க‌ப்படுவதையொட்டி, அசம்பாவித ‌நிக‌ழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினரும், காவல‌ர்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய சென்னை கோட்டையில் நே‌ற்று மாலை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

தலைமை செயலர் எஸ்.மாலதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர் கருத்தையா பாண்டியன், காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் லத்திகா சரண், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், சென்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரன், உளவுப்பிரிவு ஐ.ஜி. ஜாபர் சேட், சென்னை புறநகர் காவ‌ல்துறை ஆணைய‌ர் எஸ்.ஆர்.ஜாங்கிட் மற்றும் அனைத்து மண்டல ஐ.ஜி.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அவை விவரம் வருமாறு: நாளை காலையில் இருந்து தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் காவல‌‌ர்க‌ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். காவ‌ல்துறை அதிகாரிகள், காவல‌ர்க‌ள் யாரும் நாளை விடுமுறையில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. விடுமுறையில் சென்றவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து தரப்பினரும் அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அனைத்து மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர்களும், மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்களும், மதத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காவல‌ர்களோடு, வருவாய்த்துறை ஊழியர்களும் இணைந்து அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட வேண்டும்.

கோவை, திருப்பூர், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை, வேலூர் போன்ற பதற்றமான பகுதிகளில் அதிகளவில் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட வேண்டும். இந்த பகுதிகளில் முக்கியமான இடங்களில் உயர் அதிகாரிகள் அதிரடிப்படையினரோடு எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு சமாளிப்பதற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும். முக்கியமான நெடுஞ்சாலைகளில் காவல‌ர்க‌ள் ரோந்து சுற்றி வரவேண்டும்.

மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், பேரு‌ந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், மத வழிபாட்டு தலங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள் போன்றவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடவேண்டும்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான அமைப்புகளின் நடவடிக்கைகளை உளவுப்பிரிவு ரகசியமாக கண்காணித்து தகவல்கள் சேகரிக்க வேண்டும். அனைத்து நகரங்களிலும் சந்தேகத்துக்கிடமான சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறதா? அவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகளில் வன்முறையை தூண்டும் வாசகங்கள் உள்ளனவா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

சந்தேகத்துக்கிடமான ரகசிய ஆலோசனை கூட்டங்கள் நடக்கிறதா? நபர்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். அனைத்து முக்கியமான ரோடு சந்திப்புகளிலும் வாகன சோதனை நடத்த வேண்டும் என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னை நகரில் மண்ணடி, புளியந்தோப்பு, செம்பியம், ஓட்டேரி, புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மத வழிபாட்டு தலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.

சென்னையை பொறுத்தமட்டில் பிரச்சனைக்குரிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்களையும், நிர்வாகிகளையும் அழைத்து பேசிவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் அமைதி நிலவ முழு ஒத்துழைப்பு தருவோம் என்று உறுதி கொடுத்துள்ளதாகவும், எனவே சென்னையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாது என்றும் ஆணைய‌ர் ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் போது அமைதி காப்போம்! TNTJ வெளியிட்டுள்ள அறிக்கை!

பாபரி மஸ்ஜித் நிலம் உரிமை குறித்து வருகின்ற 24.09.2010(வெள்ளி) அன்று தீர்ப்பு வெளிவரவிருப்பது அறிந்ததே. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்திற்கும், தனது கட்டுப்பாட்டில் உள்ள 600 பள்ளிவாசல்களுக்கும் பின் வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 1949ஆம் ஆண்டு வரை பாபர் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். அதாவது உரிமை மற்றும் அனுபவம் ஆகிய இரு அடிப்படைகளில் அந்த இடம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்று உறுதியாகிறது.
இந்திய நீதி மன்றங்களில் சிவில் வழக்குகளில் இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அனுகூலமாகவே அமைய உள்ளது.
அவ்வாறு தீர்ப்பு அநுகூலமாக அமையும் பட்சத்தில் முஸ்லிம்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் அடக்கமும் அமைதியும் காத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அயோத்தி தீர்ப்பு அமைதி காக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது வேண்டுகோள்
அயோத்தியில் ராம ஜென்ம பூமி மற்றும் பாபரி மஸ்ஜித் வளாகம் யாருக்கு உரிமைபட்டது என்பது குறித்து லக்னோ உயர் நீதிமன்ற கிளை வருகிற 24-ந்தேதி தீர்ப்பு வழங்க விருக்கிறது. அந்தத் தீர்ப்பை மதித்து அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி தீர்ப்பு வரவிருக்கும் வேளையில் அனைத்து மதப் பிரிவினரும் அமைதியும், நல்லிணக்கவும் பேண பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...