Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 15, 2010

நடைபாதை கோவில்கள் தமிழகத்தில் அதிகம்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் நடைபாதை கோவில்கள் உள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வழிபாட்டு தலங்களை அகற்றும்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன்படி பல மாநிலங்களில் நடைபாதை கோவில்கள், சர்ச்சுகள், மற்ற வழிபாட்டு சின்னங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் பல மாநிலங்களில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என, பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது பற்றி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அம்மாநிலத்தின் சார்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

இது குறித்து நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் குறிப்பிடுகையில், "நடைபாதை அல்லது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை அகற்ற வேண்டும். அகற்றவில்லையெனில் அது குறித்த காரணத்தை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை செயலர் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இது குறித்த நடவடிக்கை பற்றிய முழு விவரமும் தேவை' என, உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் போக்குவரத்துக்கு இடையூறாக வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதாவது 77 ஆயிரத்து 450 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 58 ஆயிரத்து 253 இடங்களிலும், குஜராத்தில் 15 ஆயிரம் இடங்களிலும் வழிபாட்டு தலங்கள் போக்குவரத்து இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் எந்த ஒரு வழிபாட்டு தலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்படவில்லை என, அந்த மாநிலத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...