Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 28, 2010

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை மூலம், மத்திய அரசின் காப்பீட்டுப் பிரீமியத்தில் 50 சதவீத மானியத்துடன், கடலூர் மாவட்டத்தில் பசுக்கள் மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கால்நடைகளை வளர்போர், தங்களிடம் உள்ள கிடேரிகள், கறவை மாடுகள், கருவுற்ற மாடுகள், பால் வற்றிய மாடுகள் அனைத்தையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாடுகளுக்கு காப்பீடு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யப்படும். இறக்கும் மாடுகள், நிரந்தரமாகக் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத மாடுகள், விபத்தில் சிக்கும் மாடுகள் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் இழப்பீடு கிடைக்கும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், தரம் உயர்த்தப்பட்ட கால்நடை கிளை நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள, கால்நடை மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு, மாடுகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...