செப்டம்பர் 12, 2010
ஹஜ் யாத்திரைக்கு தனியார் விமானங்கள்
முதன் முறையாக ஹஜ் பயணத்திற்கு இந்த ஆண்டு ஏர்-இந்தியா தன் விமானங்களை இயக்கவில்லை. ஹஜ் பயணத்திற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக மட்டுமே, ஏர்-இந்தியா செயல்பட உள்ளது. மூன்று தனியார் நிறுவன விமானங்கள், அடுத்த மாதம் 10ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து மெக்காவிற்கு சிறப்பு விமானங்களை இயக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் மெக்கா பயணத்திற்கு சென்று வருகின்றனர். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஏர்-இந்தியா நிறுவனம், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதன் முறையாக ஹஜ் பயணத்திற்கான சிறப்பு விமானங்களை ஏர்-இந்தியா நிறுவனம் இயக்கவில்லை. சவுதி ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், என்.ஏ.எஸ்., ஏர் ஆகிய மூன்று விமான நிறுவனங்களே இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கான விமானங்களை இந்தியாவில் இருந்து இயக்குகின்றன. இந்த விமானங்கள் மூலம், இப்புனிதப்பயணம் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சிவில் விமான போக்குவரத்து மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...