81 கோடி ஏழைகள் வசிக்கு இந்தியாவில் சாதரண குடிமகன் ஒரு வங்கி கணக்கு தொடங்க ஆயிரம் கேள்விகள் கேட்கும் வங்கிகள் பணம் கொடுக்கும் முதலாளிகளுக்கு செருப்பாய் சேவகம் செய்வதையே கடமையாய் கொள்கிறது.. இதோ அதற்கு உதாரணம் இந்திய அரசின் ஸ்டேட் பேங்க் செய்த அட்டூழியம்..
கோடீஸ்வர கஸ்மர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் சிறப்புக் கிளையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கியுள்ளது.
இந்த சிறப்புக் கிளை முதலில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கிளையில் அக்கெளண்ட் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும். இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பே ரூ. 1 கோடியாக இருக்க வேண்டும். அதுவும் வங்கியிலிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே யாரும் கணக்குத் தொடங்க முடியும்.
‘Kohinoor Banjara Premium Banking Centre’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிளை 4,000 சதுர அடியில் மிக நவீன பைவ் ஸ்டார் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கணக்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகளையும் ஸ்டேட் பாங்க் வழங்கும். லாக்கர் வசதி, வீட்டுக்கே வந்து கார்களில் வங்கிக்கு அழைத்துச் செல்லும் வசதியும் உண்டு.
வீடியோ கான்பரன்ஸ் வசதிகள், கம்பியில்லா இண்டர்நெட் வசதி, காபி பார்கள் என வங்கியில் ஏகபபட்ட வசதிகள். இந்தக் கிளைக்காக ரூ. 80 லட்சத்தை செலவிட்டுள்ளது வங்கி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...