Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 30, 2010

ஐ.நா இரட்டைவேடம் போடுவதை நிறுத்தவேண்டும்: சவூதி அரேபியா

நியூயார்க்,செப்.30:பிரகடனங்களை நிறைவேற்றுவதில் இரட்டைவேடம் போடுவதை ஐ.நா நிறுத்த வேண்டும் என சவூதிஅரேபியா கோரியுள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதில்தான் சில நிரந்தர உறுப்பினர்கள் அவர்களுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஐ.நாவின் 65-வது மாநாட்டில் சவூதி வெளியுறவுத்துறை அமைச்சர் சவூத் அல் ஃபஸல் குற்றஞ்சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது: "அரபு-இஸ்ரேல் உறவு அமைதியாக மாற்றுவதற்கு, 1967-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்த அரபு பிரதேசங்களிலிருந்து யூதர்கள் வெளியேறவேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சர்வதேச சட்டங்களையும், ஐ.நாவின் தீர்மானங்களையும், ஃபலஸ்தீனர்களின் உரிமைகளையும் இஸ்ரேல் மதித்து நடக்கவேண்டும்.

எல்லா குடியேற்றங்களிலிருந்தும் அவர்கள் வாபஸ்பெற வேண்டும். குடியேற்றங்கள் தொடர்ந்தால் தற்பொழுது நடைபெறும் பேச்சுவார்த்தை பயனற்றதாகும். நம்பிக்கையை நிலைநாட்டும் விதமான நடவடிக்கைகளை ஐ.நா மேற்கொள்ளவேண்டும். தேவையில்லாமல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் உறுப்பு நாடுகளை ஐ.நா தடுக்கவேண்டும்.

ஐ.நாவின் பொருளாதார-சமூக கவுன்சிலை வலுப்படுத்த வேண்டும். உலக அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பிரச்சனை.

காலனியாதிக்கத்திற்கு சமமானது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு. அப்பகுதியின் சமாதான நடவடிக்கைகளுக்கு அரபு நாடுகளின் பரிபூரண ஆதரவு உண்டு.

அணுசக்தி திட்டங்கள் மீதான சந்தேகங்களை போக்க ஈரான் பயன்தரத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அணுஆயுத பரவல் தடைச்சட்டத்தில் கையெழுத்திடாத இஸ்ரேலின் நிலைப்பாடு எங்களை நிம்மதியிழக்கச் செய்கிறது." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...