Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 09, 2010

ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் வெற்றியை நெருங்கிவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் வெற்றியை அண்மித்து விட்டதாக தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் அறிவித்துள்ளார்.

தமது போராளிகள் வெற்றிப் பாதையில் பயணிப்பதாகவும், நேட்டோ படையினர் படுதோல்விகளை எதிர்நோக்கி வருவதாகவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்காது கூடிய விரைவில் தமது துருப்பினரை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவிடம், முல்லா ஒமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புனித ரமழான் நோன்பு திருநாளை முன்னிட்டு ஜிஹாத் இணைய தளங்களில் முல்லா ஒமர் இந்த செய்தியை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சுமார் 150,000 நேட்டோ படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் இஸ்லாமிய அரசு உருவாக்கப்படும் என முல்லா ஒமர் உறுதியளித்துள்ளார்.

சிவிலியன்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் யுத்தம் முன்னெடுக்கப்பட வேண்;டுமென அவர் தமது போராளிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
முல்லா ஒமார் தலிபான்களின் ஆன்மீகத் தலைவராகவும், இராணுவத் தலைவராகவும் கருதப்படுகின்றார்.

கடந்த பல ஆண்டுகளாக ஒமர் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தலிபான் தாலைவர் ஒமார் பாகிஸ்தான் மறைந்திருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...