காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரிக் கரையில் முள் செடிகள் அகற்றும் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியின் கீழ் கரையில் முள் செடிகள் வளர்ந்து கரைகள் பலவீனமாகும் சூழல் உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில் நேற்று காலை முதல் தடுப்பு சுவர்களில் உள்ள முள் செடிகள் அகற் றும் பணி துவங்கியது. சிதம்பரம், லால் பேட்டை, புவனகிரி, சேத் தியாத்தோப்பு, அணைக் கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் பாசன உதவியாளர்கள் மற் றும் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை பணியாளர்கள் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீராணம் உதவி பொறியாளர் சரவணன் கூறுகையில், "வீராணம் கரைகளில் அமைந்துள்ள லால் பேட்டையில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களான லால் பேட்டை, திருச்சன்னபுரம், கொள்ளுமேடு, கந்தகுமாரன், கலியமலை, பரிபூரணநத்தம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இப்பணிகள் நடைபெறும். 14 கி.மீ., தூரம் முழுவதும் 15 நாட்களுக்குள் அகற்றப்படும். இன்று முதல் புல்டோசர் உதவியுடன் பணிகள் நடைபெறும்' என்றார். இதுபோன்ற பணிகளை அவ்வப்போது செய்து வந்தால் கரைகளை பாதுகாப்பது மட்டுமில்லாமல் குறைவான ஆட்களைக் கொண்டு பணியாற்ற முடியும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...