Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 26, 2010

வருகிறது ஆதார் கார்டு: அடித்தட்டு மக்களுக்களான பான் கார்டு


வருமானவரி கட்டுவோருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பான் கார்டு அளிக்கப்பட்டிருப்பதை போல ஏழை எளிய மக்களுக்கும் அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரசின் நலத்திட்டங்களை கொண்டு போய் சேர்க்கவும், இந்த திட்டங்கள் அவர்களை ஒழுங்காக போய் சேருகிறதா என்பதை கண்காணிக்கவும் இந்த அடையாள அட்டை வழி வகுக்கும். இந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கான சட்ட மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன் பெறுவர். நாடு முழுவதும் வருமான வரி செலுத்துவோருக்கு பான் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண் என்பது குறிப்பிட்ட நபரை மட்டுமே குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அதை போலவே அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு நலத்திட்டங்கள் மூலம் பயன் பெறும் அடித்தட்டு மக்களுக்கும் அடையாள எண் அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மொத்தம் 12 இலக்கங்களை கொண்டிருக்கும் இந்த எண்ணுக்கு "ஆதார் எண்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண்ணை வழங்குவதற்கும் இதுகுறித்த பணிகளை மேற்கொள்வதற்கும் ஒரு அதிகார அமைப்பு நிறுவப்படவுள்ளது. தேசிய "அடையாள எண் அதிகார அமைப்பு' என்ற பெயரில் இந்த அமைப்பு இயங்கும். ஏழை மக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும், அந்த எண்களை நிர்ணயிப்பது குறித்தும் இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்தும் இந்த அதிகார அமைப்பு முடிவு செய்யும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை எதிர்வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் விதமாக முதல் ஆதார் எண்ணை காங்கிரஸ் தலைவர் சோனியா அறிமுகம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள நந்தூர் பார் என்ற இடத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் ஆதார் எண்ணை சோனியா வழங்கவுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...