செப்டம்பர் 20, 2010
வைரத்தாலான கிரகம். அதிர்ச்சிதகவல்!
பூமியில் வைரக் கற்கள் பெரும் விலைக்கு விற்க்கப்படும் ஒரு பொருள். சிறிய குண்டூசியளவு வைரக் கல் கூட பல லட்சம் விலை பெறுமதியானது. அத்தோடு இதுவரை காலமும் உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது கோகினூர் வைரம் என்றழைக்கப்படும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஓத்தது. அது பல மில்லியன் டாலர் பெறுமதி, ஆனால் அண்டவெளியில் உள்ள ஒரு கிரகம் வைரத்தால் ஆனது என தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4,000 கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இக் கிரகம் முழுக்க முழுக்க வைரக் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாதாரணமாக காபன் என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. தங்கத்தை கரட் கொண்டு, 24 கரட் அல்லது 18 அல்லது 9 கரட் என்பது போல வைரத்தை அதன் அடர்த்தியை வைத்தே மதிப்பிடுவார்கள். சுமாரான வைரக் கற்கள், 0.05 கரட் ஆக இருக்கும். 1 கரட் வைரக் கற்கள் மிகுந்த விலையானவை. அதிலும் 2 கரட் என்றால் அதி உச்ச விலை மதிப்பானவை. ஆனால் அண்ட வெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்றுகேட்டால் பூமியில் உள்ளவர்கள் தலைசுற்றி விழுவது நிச்சயம்.
அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் கரட் ஆகும். அக் கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில்லியன் பெறுமதியாக இருக்கும். ஒரு காலத்தில் எமது சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியனைப்போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து, மிகவும் குளிர்ந்து இறுகி வைரக் கட்டியாக மாறியுள்ளதாம். அது பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அக்கிரகத்திற்கு எந்த நாடு முதலில் தனது செய்மதியை அனுப்பப்போகிறதோ தெரியவில்லை. அப்படி ஒரு நாடு அனுப்பினால் அந்நாடே உலகில் செல்வம் மிக்க நாடாகத் திகழும்.
ஆனால் 50 ஒளியாண்டுகள் என்றால் என்ன என்று தெரியுமா?
ஒளி சுமார் 1லட்சத்தி 87,000 மைல் தூரம் செல்லும் 1 செக்கனுக்கு. அப்படியானால் 1,87,000 ஐ 60 ஆல் பெருக்கி, அதை 24 ஆல் பெருக்கி வரும் விடையை 365 ஆல் பெருக்கினால் வரும் தூரமே 1 ஒளியாண்டு ஆகும். அப்படி என்றால் 50 ஒளியாண்டுகள் என்றால் எவ்வளவு தூரம்...????
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...