Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 13, 2010

இன்று முதல் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஹெச்1என்1 வைரசைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி மருந்து போடும் முறை சென்னையில் இன்பறு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் தேவைப்படுவோருக்கு ரூ.150 கட்டணத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து போடப்படும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் கூறினார்.

ஒரு வாரத்தில் 3 பேர் சாவு: பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் தலைமைச் செயலக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி மோகனவேல், வேளச்சேரியைச் சேர்ந்த தேவகி (42) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த வேலூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சரவணன் உள்ளிட்ட மூன்று பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு. சுப்புராஜ் தலைமையில், சுகாதாரத் துறை அதிகாரிகளின் அவசரக் கூட்டம் சென்னையில் நே‌ற்று நடைபெற்றது.

௦கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பே‌சிய வி.கு.சுப்புராஜ், ஆரம்ப அறிகுறிகள் என்ன? இருமல்-சளியுடன் வைரஸ் காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி ஆகியவை பன்றிக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும். தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் பன்றிக் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கு மேலே குறிப்பிட்ட ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை பெறும் நிலையில் உயிரிழப்பு ஏற்படாது. பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கத்துடன் தடுப்பூசி மருந்து போடும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்து போடப்படும். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களும், அய‌ுமல்நாடுகளுக்கு பயணம் செய்வோரும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று சுப்புராஜ் கூ‌றினா‌ர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...