இந்தியர்கள் மூன்று பேரில் ஒருவர் ஊழல்வாதியாகவே உள்ளதாக நேற்று முன்தினத்துடன் பதவி விலகிய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதியுஸ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மூன்றில் ஒரு இந்தியர் முற்றிலும் ஊழல்வாதியாக உள்ளதாகவும், பாதி இந்தியர்கள் ஏறக்குறைய ஊழலின் எல்லையில் உள்ளதாகவும், அதிகரித்து வரும் செல்வ அதிகரிப்புதான் இந்த பிரச்சனக்கு அதிக காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மிக அதிகமாக எந்திரத்தனமாக மாறிவிட்டதே ஊழல் அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்பெல்லாம் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாற்று கூறப்பட்டால் அவர் அவமானத்தில் தலை கவிழ்ந்து போவார் என்றும், ஆனால் அத்தகைய நிலையை இப்போது காணமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சின்ஹா, சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக இது அமைந்துவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 09, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...