அபுதாபி,செப்.4:மொகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப்பின் கையெழுத்துப் பிரதியான 300 வருடங்கள் பழமையான குர்ஆன் பிரதி ஜெர்மனியில் ஏலமிடப்படுகிறது.
14.5 சென்டிமீட்டர் நீளமும், 24 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட இந்த கையெழுத்துப் பிரதியான திருக்குர்ஆன் மொகலாய மன்னர்களின் காலத்திலுள்ள பழமையானவற்றில் ஒன்றாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த ஒருவர்தான் இதனை ஜெர்மனியில் ஸெபோக் ஏல மையத்தில் விற்பனைக்காக வைத்துள்ளார்.
பொன்னாலான சித்திர வேலைப்பாடுகள் கொண்ட இதன் பேப்பர் இயற்கையான பொருட்களால் பயன்படுத்தி தயாரித்ததாகும். விலைமதிப்பற்ற தாதுப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட மையினால் எழுதப்பட்டுள்ளது.
நீலம், மாணிக்கம் உள்ளிட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வெளி அட்டையைக் கொண்டுள்ளது இக்குர்ஆன் பிரதி.
இப்பிரதியில் பெரும்பாலான அத்தியாயங்களும் அவுரங்கசீப்பின் கையினால் எழுதப்பட்டதாகும். அவருடைய அரண்மனையில் இதற்கென சிறப்பு பிரிவே உருவாக்கப்பட்டிருந்தது.
900 யூரோ இதன் துவக்க ஏல விலை. வருகிற அக்டோபரில் நடக்கவிருக்கும் பாரம்பரிய பொருட்களின் ஏலத்தில் மிக உயர்ந்த விலை இதற்கு கிடைக்குமென எதிர்பார்ப்பதாக ஸெபோக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்தி: பாலைவனத் தூது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...