Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 12, 2010

2வது குழந்தைக்கு சீன அரசு அனுமதி

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று விதித்திருந்த தடையை விலக்கிக்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது.

மக்கள் தொகை குறைவாக உள்ள 5 மாகாணங்களில் மட்டும் 2வது பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பட்டுள்ளது. இது 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல மாகாணங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தால் பெரும்பாலான சீனர்கள் ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்வதாகவும், பெண் குழந்தையை கருவிலேயே கலைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கருக்கலைப்புகளும் அதிகரித்திருப்பதாலும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்ததாலும் சீன அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...