காட்டுமன்னார்கோவில் : வீராணம் பொதுப்பணி துறை அலுவலகத்தில் மழைக்காலம் நெருங்கும் நிலையில் தொலைபேசி வசதி இல்லாமல் அதிகாரிகள் அவதியடைந்து வருகின்றனர். மொபைல்போன் ஆதிக்கம் அதிகரித்து விட்ட நிலையிலும் அரசு அலுவலங்களில் முக்கிய தகவல்கள் பரிமாற்றத் திற்கு "லேண்ட் லைன்' தொலைபேசி சேவை அவசியமாக கருதப்படுகிறது. குறிப்பாக கடலூர் மாவட் டத்தின் கடைகோடி பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளில் மழை, வெள்ள காலங்களில் "லேண்ட் லைன்' மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
வீராணம் ஏரியின் நீர் நிலை குறித்து உடனுக்குடன் சென்னை, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் வீராணம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் "லேண்ட் லைன்' வசதி இல்லாததால் மொபைல்போனையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மெபைல்போன் டவர் வேலை செய்யாத நேரங்களில் அதிகாரிகள் டெலிபோன் பூத்திலிருந்து போன் செய்து உயர் அதிகாரிகளுக்கு புள்ளி விவரங் களை கொடுக்க கூடிய நிலை உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரங்களை பெற முடியாமல் போகிறது. எனவே அவசிய, அவசரம் கருதி "லேண்ட் லைன்' தொலைபேசி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...