Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 07, 2010

செயற்கை மருதாணி ஆபத்து

இன்று மணப்பெண் முதல் சாதாரண பெண்கள் வரையில் கைகள் மற்றும் கால்களிலும் மருதாணி போடுவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.

முன்னர் மருதாணி இயற்கையான முறையில் தாயாரிக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது அவை செயற்கையான முறையில் இரசாயனப் பொருள்கள் சேர்த்து தாயார் செய்யப்பட்டு கோன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கடைகளில் விற்பனையாகி வருகின்றது.

இவ்வாறு எமது கைகளிலும் கால்களிலும் மருதாணிக் கோலமிடுவதால் லுக்கேமியா என்ற புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வொன்றை நடத்தியதாகவும், இதன்போது ஆண்களை விட அதிகளவான பெண்கள் லுக்கேமியா புற்றுநோய்க்கு ஆளாகியிருப்பது தொடர்பில் தெரியவந்துள்ளது. ஏனைய நாடுகளிலுள்ள பெண்களை விட அங்குள்ள 63 சதவீதமான பெண்கள் லுக்கேமியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணம் என்னவென்று ஆராயப்பட்டபோது அழகிற்காக கைகளிலும் கால்களிலும் வரைந்து கொள்ளும் மருதாணி காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட இராசாயனப் பொருள்கள் இந்த புற்றுநோய்த் தாக்கத்திற்கு காரணமாகும் என அரியப்பட்டது

எனவே, கடைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும் மருதாணிப் பசையை தவிர்த்து நாம் இயற்கையான முறையில் மருதாணிப் பசையை தயார் செய்யலாம் அந்தவகையில் மருதாணி இலையுடன் தேயிலைச் சாயம் மற்றும் தேசிப்புளி ஆகியவற்றைச் சேர்த்து தாயார் செய்தால் சிவக்கும் மருதாணி நமது கைகளில் சிவக்கும். நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...